மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பள்ளி முதல்வரை துப்பாக்கியால் சுட்ட மாணவர்; உ.பி.யில் நடந்த அதிர்ச்சி சம்பவம்..!!
உத்தரபிரதேசத்தில் மாணவர் ஒருவர் பள்ளி முதல்வரை துப்பாக்கியால் சுட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் சீதாபூர் மாவட்டத்தில் ஒரு தனியார் பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் பயிலும் குரிந்தர் சிங் என்ற மாணவருக்கும், மற்றொரு மாணவருக்கும் இடையே மோதல் உண்டானது.
அது தொடர்பாக பள்ளி முதல்வர் ராம் சிங் வருமா மாணவர் குரிந்தர் சிங்கை கண்டித்ததாக கூறப்படுகிறது. அதனால் ஆத்திரமடைந்த அந்த மாணவர், நாட்டு துப்பாக்கியால் பள்ளி முதல்வரை இருமுறை சுட்டுள்ளார்.
அந்த காட்சி, பள்ளியில் இருக்கும் கண்காணிப்பு கேமராவில் பதிவானது. காயமடைந்த பள்ளி முதல்வர், மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதுதொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து, தலைமறைவான மாணவரை தேடிவருகின்றனர்.