மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ரூ.400க்கு கியாஸ் சிலிண்டர்; தெலுங்கானா முதல்வர் வாக்குறுதி.!
தெலுங்கானா மாநிலத்தில் தற்போது பாரத ராஷ்ட்ர சமிதியின் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. அம்மாநிலத்தின் முதல்வராக சந்திரசேகர ராவ் பணியாற்றி வருகிறார்.
அம்மாநிலத்தில் நவ. 30ம் தேதி மாநில சட்டப்பேரவை தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அங்குள்ள கட்சிகள் தேர்தலுக்கு முழுவீச்சில் தயாராகி வருகின்றன. தேர்தல் முடிவுகள் டிசம்பர் 03ம் தேதி வெளியாகிறது.
இந்நிலையில், அம்மாநில முதல்வர் சந்திரசேகர் ராவ், மீண்டும் அம்மாநிலத்தில் பாரத ராஷ்ட்ர சமிதி கட்சி ஆட்சிக்கு வந்தால், தகுதியுள்ளோருக்கு ரூ.400 க்கு கியாஸ் சிலிண்டர் வழங்கப்படும்.
வறுமைக்கோட்டிற்கு கீழ் இருக்கும் குடும்பத்திற்கு ரூ.5 இலட்சம் காப்பீடு வழங்கப்படும் என தெரிவித்துள்ளார். இது அம்மாநில மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.