திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
இறந்த முதலை போல ஏரியில் மிதந்த ஆசாமி; ஒருகணம் பதறிப்போன காவலர்கள்.. நகைப்பூட்டும் சம்பவமான சடலம் மீட்பு.!
தெலுங்கானா மாநிலத்தில் உள்ள வாராங்கல் மாவட்டம், ஹநுமன்கொண்டா, ரெட்டிபுரம் பகுதியில் உள்ள ஏரியில், கரையோரம் ஒருவர் இறந்து கிடந்தது போல நபர் ஒருவர் இருந்துள்ளார். இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த மக்கள், காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
தகவல் அறிந்த கக்கட்டியா யூனிவர்சிட்டி காவல் துறையினர், நிகழ்விடத்திற்கு விரைந்து சடலத்தை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். அச்சமயம் சடலம் திடீரென உயிர்த்தெழுந்து காவலரின் கையை பிடித்தது. அரைகுறை உறக்கத்தில் இருந்து எழுந்த ஆசாமி, தான் உயிரோடு இருப்பதாக கூறி அதிர்ச்சி அளித்தார்.
இதையும் படிங்க: சரக்குடன் விபத்திற்குள்ளான லாரி; கையில் கிடைத்த பாட்டிலுடன் ஓட்டம் பிடித்த பொதுமக்கள்.!
அதிகாரிகளுக்கு அதிர்ச்சி கொடுத்த ஆசாமி
பின் இதுகுறித்து ஆசாமியிடம் அதிகாரிகள் விசாரித்தபோது, சம்பந்தப்பட்ட நபர் நெல்லூர் மாவட்டத்தில் உள்ள காவாலி பகுதியில் செயல்பட்டு வரும் குவாரியில் கல் உடைக்கும் தொழிலாளியாக காலை 7 மணிமுதல் நள்ளிரவு 12 மணிவரை வேலை பார்த்து வருவதை வழக்கமாக கொண்டுள்ளார்.
சம்பவத்தன்று மதுபோதையில் இருந்தவர், ஏரிக்கரைக்கு வந்து உறங்கி இருக்கிறார். குளிர்ந்த சூழலுக்காக ஏரிக்குள் இறங்கி கரையோரமாக படுத்துள்ளார். போதையில் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த நபரை இறந்ததாக மக்கள் கருதியதால் அவரின் உறக்கம் பறிபோனதாகவும் தெரிவித்துள்ளார்.
சடலம் கிடப்பதாக தகவல் அறிந்த காவல் துறையினர், அவசர ஊர்தி குழுவினர், மருத்துவர்கள் என தனது தரப்பு அதிகாரிகளை களமிறக்கி இருக்கிறது. இறுதியில் ஆசாமியின் செயல் அம்பலமானதை தொடர்ந்து, அவர்கள் ஏமாற்றத்துடன் கலைந்து சென்றனர்.
Drunk Man Mistaken for Dead, Found Alive in Hanumakonda Pond
— Sudhakar Udumula (@sudhakarudumula) June 10, 2024
Residents of Reddypuram Kovelakunta in Hanumakonda were taken aback today after discovering what they initially believed to be a dead body floating in the local pond.
The man, later identified as a quarry worker from… pic.twitter.com/3koRv6iCai
இதையும் படிங்க: போதையில் வீண் தைரியம்; நீச்சல் தெரியாமல் ஆற்றில் குதித்த குடிகார இளைஞன் பலி; வீடியோ உள்ளே.!