மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
சரக்குடன் விபத்திற்குள்ளான லாரி; கையில் கிடைத்த பாட்டிலுடன் ஓட்டம் பிடித்த பொதுமக்கள்.!
தெலுங்கானா மாநிலத்தில் உள்ள செகந்திராபாத், போயினப்பள்ளி பகுதியில் இன்று அதிகாலை லாரி ஒன்று சென்றுகொண்டு இருந்தது. லாரி எதிர்பாராத விதமாக விபத்திற்குள்ளான நிலையில், அப்பகுதி மக்கள் விபத்திற்குள்ளான லாரி அருகே சென்றனர்.
மதுபானம் ஏற்றிச்சென்ற லாரி விபத்து
அச்சமயம், விபத்திற்குள்ளான லாரி மதுபான பாட்டில்கள் ஏற்றி வந்தது என தெரியவர, மக்கள் முந்தியடித்துக்கொண்டு மதுபாட்டில்களை எடுத்து ஓட்டம் பிடித்தனர். விபத்தில் சிக்கிய ஓட்டுநர் மற்றும் கிளீனர் பொருட்களை விட்டுசெல்லுமாறு கூறியும் பலனில்லை.
இதையும் படிங்க: தொழிற்சாலையில் பாய்லர் வெடித்துச்சிதறி பயங்கர விபத்து; 4 பேர் பலி., 45 பேர் படுகாயம்.!
பின் தகவல் அறிந்து வந்த காவல் துறையினர், அங்கு இருந்த பொதுமக்களை விரட்டியடித்தனர். மேலும், மாற்று வாகனத்தில் மதுபானங்கள் ஏற்றி அனுப்பி வைக்கப்பட்டன. லாரி கிளீனர் மற்றும் ஓட்டுநர் லேசான காயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதி செய்யப்பட்டனர்.
இதையும் படிங்க: 20 அடி பள்ளத்தில் பாய்ந்த பேருந்து; 18 பேர் பரிதாப பலி.!