மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கொடுத்த கடனை திருப்பி கேட்டதால் கல்லால் அடித்து கொலை செய்த கொடூரம்.. அதிர்ச்சி சம்பவம்..!!
30 ஆயிரம் ரூபாய் கடனை திருப்பி கேட்டதால் கூலித் தொழிலாளியை கொலை செய்த நபரை காவல்துறையினர் கைது செய்தனர்.
புதுச்சேரி மாநிலம் உருளையன்பேட்டை பகுதியில் வசித்து வந்தவர் ரஞ்சித் குமார் (40). இவர் கூலி தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் கண்ணன் (45) என்பவருக்கு ரூபாய் 30,000 கடன் கொடுத்துள்ளார்.
நீண்ட நாட்களாகியும் கண்ணன் வாங்கிய கடனை திருப்பிக் கொடுக்காததால் இது தொடர்பாக இருவருக்குள்ளும் தகராறு ஏற்பட்டுள்ளது. தகராறு முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த கண்ணன், அருகில் கிடந்த கல்லால் ரஞ்சித் குமாரின் தலையில் அடித்துள்ளார்.
இதில் ரஞ்சித் குமார் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், உயிரிழந்த ரஞ்சித் குமாரின் உடலை கைப்பற்றி உடற்கூராய்விற்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் கண்ணனை கைது செய்தனர்.