மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
சொத்து கேட்டு டார்ச்சர்.. மகன்களுக்கு பயந்து கணவனை வீட்டிலேயே தகனம் செய்த தாய்..! இப்படியும் மகன்கள்..!!
ஆந்திர மாநிலத்தில் உள்ள கர்னூல் பகுதியைச் சேர்ந்தவர் ஹரிபிரசாத். இவர் கடந்து சில நாட்களாக வயது மூப்பு மற்றும் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு வந்த நிலையில், திடீரென உயிரிழந்துள்ளார். இந்த தகவலை அவரின் மனைவி யாருக்கும் தெரியப்படுத்தாமல் வீட்டிலேயே தகனம் செய்துள்ளார்.
இதுகுறித்து காவல் துறையினருக்கு தெரியவரவே, ஹரிபிரசாத்தின் மனைவியிடம் விசாரணை நடத்தியுள்ளனர். விசாரணையில், தங்களது மூத்த மகன் மருத்துவராக பணியாற்றி வருகிறார். இளைய மகன் கனடாவில் பொறியாளராக இருந்து வருகிறார்.
இருப்பினும் தங்களை கவனித்துக்கொள்ளவில்லை. ஒருவேளை தனது கணவர் இறந்தது தெரிந்தால் சொத்துக்களை எழுத்தித்தர சொல்லி கேட்டு தொந்தரவு செய்வார்கள் என்ற பயத்தில் யாரிடமும் சொல்லாமல் வீட்டிலேயே தகனம் செய்தேன் என்று தெரிவித்துள்ளார்.