மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கேரள அரசுக்கு எதிராக காங்கிரஸ் கட்சி கொண்டு வந்த நம்பிக்கை இல்லாத் தீர்மானம் தோல்வி!
கேரளாவில் தங்கம் கடத்திய விவகாரம் பினராய் விஜயன் அரசுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது. இந்த விவகாரத்தில் முதல்வரின் முதன்மை செயலாளராக இருந்த ஐஏஎஸ் அதிகாரி சிவசங்கருக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது. தங்கம் கடத்தல் வழக்கில் முக்கிய நபரான சொப்னாவுடன், கேரள முதல்வர் பினராய் விஜயன் அலுவலகத்தில் உள்ள பலருக்கும் நெருங்கிய பழக்கம் இருந்துள்ளது என நீதிமன்றத்தில் என்ஐஏ தெரிவித்தது.
இதனை அடுத்து கேரல மாநில முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அரசுக்கு எதிராக சட்டமன்றத்தில் காங்கிரஸ் கட்சி நேற்று நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வந்தது. இந்த நம்பிக்கையில்லா தீர்மானம் அரசியல் கட்சிகளின் விவாதங்களுக்கு பின்னர் வாக்கெடுப்பு நடந்தது.
விவாதங்களுக்கு பினராயி விஜயன் பதிலளித்த போது, எதிர்க்கட்சியினர் கூச்சலிட்டு எதிர்ப்புத் தெரிவித்தனர். தீர்மானத்தின் மீதான வாக்களிப்பில், அரசுக்கு ஆதரவாக 87 பேரும், எதிராக 40 பேரும் வாக்களித்தனர். பெரும்பான்மைக்கு தேவையானதைவிட அதிக இடங்கள் கிடைத்ததால் நம்பிக்கையில்லாத் தீர்மானம் தோல்வியடைந்தது.