மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
நீண்ட நாட்களுக்கு பிறகு திறக்கப்படும் திரையரங்குகள்.! துவங்கியது டிக்கெட் முன்பதிவு.!
கொரோனா வைரஸ் உலகின் பல நாடுகளில் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முதற்கட்ட ஊரடங்கு கடந்த மார்ச் மாதத்தில் இருந்து அமல்படுத்தப்பட்டது. அடுத்தடுத்து நீட்டிக்கப்பட்ட இந்த பொது முடக்கம், பின்னர் படிப்படியாக தளர்த்தப்பட்டு வருகிறது.
புதுச்சேரியில் இன்று முதல் திரையரங்குகளை திறக்க புதுச்சேரி அரசு அனுமதியளித்துள்ளது. வழிகாட்டு நெறிமுறைகளின் படி இன்று முதல் புதுச்சேரியில் உள்ள சில திரையரங்குகள் மீண்டும் திறக்கப்பட உள்ளது. இதனையொட்டி திரையரங்குகளில் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்து சமூக இடைவெளியுடன் அமர இருக்கைகள் போட்டுப்பட்டு வருகிறது. இந்தநிலையில், டிக்கெட் முன்பதிவு துவங்கப்பட்டுள்ளது.
மேலும் திரைப்பட ரசிகர்களை சமூக இடைவெளியுடன் அமர வைக்கும் வகையில் இருக்கைகளை தயார் செய்யப்பட்டுள்ளன,. திரையங்குகளுக்கு வரும் பார்வையாளர்கள் வெப்ப பரிசோதனைக்கு பிறகே அனுமதிக்கபட உள்ளனர். மேலும் திரைப்படம் பார்க்க வருபவர்களுக்கு முககவசம் இலவசமாக வழங்கப்பட உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்