தன் வீட்டில் நடந்த மோசமான சம்பவம்.! நடிகை சீதா போலீசில் பரபரப்பு புகார்.! நடந்தது என்ன?
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக உலக நாடுகளே வீட்டிற்குள் முடக்கம்! 500 பேருக்கு பார்ட்டி கொடுத்த முதலமைச்சர் மகள்!
உலக நாடுகளையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் காரணமாக, பொதுமக்கள் ஒன்றுகூடும் இடங்களை தவிர்க்க வேண்டும் என அரசு வலியுறுத்தி வருகிறது. இந்தநிலையில் நாட்டின் கோடிக்கணக்கான மக்களும் இதனைக் கடைப்பிடித்து வருகிறார்கள்.
ஆரம்பத்தில் இதுபோன்ற அரசின் விதிமுறைகளை பொதுமக்கள் கடைப்பிடிக்கத் தவறியதன் விளைவு தான் தற்போது இத்தாலியில் மக்கள் கொத்து கொத்தாக பலியாகி வருகிறார்கள்.
கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாக பிரதமர் மோடி கேட்டுக்கொண்டதை அடுத்து, இந்தியா முழுவதும் இன்று ஒருநாள் சுய ஊரடங்கு உத்தரவு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. பொதுமக்கள் ஒத்துழைத்தால் தான் இந்த கொடூர வைரஸை கட்டுப்படுத்தமுடியும் எனவும் அறிவுறுத்தப்படுகிறது.
Weddings to Public Exams cancelled across country. The footage is a political campaign organised by Ms.Kalvakuntla kavitha, daughter of CM of Telangana, for her mere MLC election, risking more than 500people &their families(exponential if their social contacts are considered). pic.twitter.com/vkbyVFYBie
— Arvind Dharmapuri (@Arvindharmapuri) March 21, 2020
இந்தநிலையில், தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவின் மகள் 500 பேருக்கு மேற்பட்டவர்களை ஒன்று கூட்டி நிகழ்ச்சி நடத்தியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதில், தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சித் தலைவர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
இதுதொடர்பான வீடியோவும் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அந்த வீடியோவுக்கு பலரும் தங்களது விமர்சனங்களையும், கண்டனங்களையும் தெரிவித்து வருகின்றனர்.