#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
ஆவின் பால் பண்ணையில் பயங்கரம்; இயந்திரத்தில் முடி சிக்கி, பெண் தலை துண்டித்து பலி.!
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஆவின் பால் பண்ணை வாயிலாக, நாளொன்றுக்கு 90 ஆயிரம் லிட்டர் பால் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இந்த நிறுவனத்தில் தயாரிப்பு பிரிவில் 30 வயதுடைய உமா ராணி என்ற பெண்மணி வேலை பார்த்து வந்துள்ளார். சேலத்தை பூர்வீகமாக கொண்ட உமாராணியின் கணவர் கார்த்திக், இருங்காட்டுக்கோட்டை பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் தொழிற்சாலையில் வேலை பார்த்து வருகிறார். உமாராணி ஆவினில் வேலை பார்த்து வந்துள்ளார். இதனிடையே, நேற்று அவர் வழக்கம்போல பணியில் ஈடுபட்டு இருந்தார்.
அச்சமயம் எதிர்பாராத விதமாக உமாவின் தலைமுடி இயந்திரத்தில் சிக்கி தலை துண்டாகி இருக்கிறது. இந்த சம்பவத்தில் உமாவின் தலை துண்டிக்கப்பட்டு பரிதாபமாக நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். இதனால் ஆவின் திருவள்ளூர் ஆவின் பால்பண்ணையின் உற்பத்தி மற்றும் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
எடப்பாடி பழனிச்சாமி இரங்கல்
இந்த விஷயம் குறித்து இரங்கல் தெரிவித்துள்ள தமிழ்நாடு எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, "திருவள்ளூர் மாவட்டம் காக்களூரில் உள்ள ஆவின் பால் பண்ணையில் பணிபுரிந்து வந்த உமாராணி என்ற பெண் ஊழியர் கன்வேயர் பெல்டில் துணி, தலைமுடி சிக்கியதால் பரிதாபமாக உயிரிழந்த செய்தி கேட்டு அதிர்ச்சியுற்றேன். உயிரிழந்த திருமதி. உமாராணி அவர்களின் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களையும் வருத்தங்களையும் தெரிவித்து கொள்கிறேன்.
இதையும் படிங்க: கிணற்றில் விழுந்த ஆடை மீட்கச் சென்றவர் பரிதாப பலி; கயிறு அறுந்துபோனதால் துயரம்.!
பால் பண்ணையில் பணி செய்யும் ஊழியர்கள் ஆபத்தான இயந்திரங்களுக்கு இடையில் பணிபுரியும் போது, அவர்களுக்கான பாதுகாப்பை ஆவின் நிர்வாகம் உறுதி செய்திருக்க வேண்டும். ஆனால் இந்த விடியா திமுக ஆட்சியில், பட்டாசு ஆலை முதல் பால் பண்ணை வரை எங்குமே தொழிலாளிகளுக்கு பாதுகாப்பு என்பதே இல்லை.
தலை துண்டித்து பலி
பாலில் ஒரு முடி கூட உதிரக் கூடாது என்பதே ஆவின் நிறுவனத்தின் பாதுகாப்பு நெறிமுறை. ஆனால் முறையான பாதுகாப்பு வசதிகளை இந்த விடியா திமுக அரசு ஏற்படுத்தித் தராததன் விளைவாகவே இன்றைக்கு ஒரு பெண் தொழிலாளி தன் தலைமுடி சிக்கி, தலை துண்டிக்கப்பட்டு உயிரிழந்திருக்கிறார்.பாதுகாப்பு விவகாரத்தில் மெத்தனப் போக்குடன் செயல்படும் விடியா திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம்.
உயிரிழந்த உமாராணி அவர்களின் குடும்பத்தாருக்கு உரிய நிவாரணத்தை வழங்குவதுடன், இனி இதுபோன்ற விபத்துகள் நிகழாவண்ணம் ஆவின் பால் பண்ணைகளில் ஊழியர்களுக்கு உரிய பாதுகாப்பு வசதிகள் ஏற்படுத்தப்படுவதை உறுதிசெய்யுமாறு விடியா திமுக முதல்வரை வலியுறுத்துகிறேன்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: கைக்குழந்தை வைத்துள்ள பெற்றோர்களே உஷார்.. பந்தை விழுங்கி 8 மாத குழந்தை பலி., திருவள்ளூரில் சோகம்.!