மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ஓடும் ரயிலில் தமிழக பயணிகள் 4 பேர் பரிதாப பலி; வட இந்தியாவில் கொளுத்தும் வெயில்.!
தமிழகத்தின் கோவை, குன்னூர் பகுதிகளில் இருந்து 68 பேர் அடங்கிய சுற்றுலா குழுவினர் உத்திரப்பிதேசத்திற்கு சுற்றுலா சென்றுள்ளனர். காசி, அலகாபாத், கயா, திரிவேணி சங்கமம் மற்றும் ஆக்ரா பகுதிகளை பார்வையிட்டுள்ளார்கள். அவர்களில் நான்கு பேர் நேற்று நண்பகல் ஆக்ரா ரயில் நிலையம் ரயில் நிலையம் வந்து அடைந்துள்ளனர்.
நேற்று ரயில் இரண்டு மணி நேரம் தாமதமாக வந்துள்ளது. இதனால் கொளுத்தும் வெயிலில் அவதிப்பட்டவர்கள் ஒரு வழியாக ரயில் ஏறி உள்ளனர். வெயில் அதிகமானதால் உண்டான உஷ்ணத்தால் ஓய்வு பெற்ற மாவட்ட கல்வி அதிகாரி பாலகிருஷ்ணன், ரயில் ஜான்சி ரயில் நிலையத்தில் நிற்கும் போது நேற்று மாலை 5 மணி அளவில் பரிதாபமாக உயிரிழந்தார்.
தொடர்ந்து அதே ரயிலில் பயணித்த ஓய்வுபெற்ற வட்டாட்சியர் சுப்பையா உள்ளிட்ட மூவர் இரவு 11 மணியளவில் உயிரிழந்துள்ளனர். இவ்வாறாக தமிழகத்திலிருந்து சுற்றுலாவிற்காக வட இந்தியா சென்ற 4 பேர் கொளுத்தும் வெயில் காரணமாக பரிதாபமாக பலியான சம்பவம் இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.