வாட்ஸ்-ஆப் வீடியோ காலில் அதிகம் பேசுபவரா நீங்கள்?!,.. அப்போ இது உங்களுக்குதான்!,, தெரிஞ்சிக்கிட்டு பேசுங்க..!



TRAI's request to charge for calls made through WhatsApp

மொபைல் நம்பரிலிருந்து கால் செய்வது போல, பலரும் ஆன்லைன் ஆப்ஸ் வழியே இன்டர்நெட் பயன்படுத்திப் பேசி வருகிறார்கள். இந்த ஆப்களில் ஆடியோ கால் மட்டும் அல்லாமல், வீடியோ கால் வசதியும் உள்ளன. மாதம் இணையத்துக்கு இவ்வளவு கட்டணம் செலுத்துகிறேன், அதிலேயே 'கால்' செய்து பேசிக் கொள்வது எளிது என்று பலரும் நினைக்கிறார்கள். மேலும் வெளிநாடுகளில் தங்கி பணிபுரிவோர் தங்களது குடும்பத்தாருடன் பேச பெரும்பாலும் இந்த ஆப்களையே பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், பொதுமக்களுக்கு அதிர்ச்சியூட்டும் செய்தி வெளியாகி இருக்கின்றது. தற்போது இலவசமாக வழங்கப்பட்டு வரும் வாட்ஸ்அப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், ஆகியவற்றின் வழியாகச் செய்யப்படும் அழைப்புகளுக்கு இனிமேல் கட்டணம் வசூலிக்க வேண்டும் என்ற ட்ராய் அமைப்பின் (TRAI) கோரிக்கையை தொலைத்தொடர்பு நிறுவனம் பரிசீலனை செய்ய உள்ளது.

இந்தியாவில் டெலிகாம் சேவையில் கடந்த சில வருடங்களில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டது. முக்கியமாக அனைத்து தொலைத் தொடர்பு நிறுவனங்களும் தங்களுடைய கட்டணங்களை மாற்றி அமைத்தன. இன்கமிங் சேவைகளை பெற கட்டணம் செலுத்தும் முறை நடைமுறைக்கு வந்தது.

இதனால் பெருமளவு மக்கள் சமூக வலைத்தளங்களான வாட்ஸ்அப் வழியாகவும் இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக் வழியாகவும் அழைப்புகளை மேற்கொள்கின்றனர். இதில் ஆடியோ கால் மட்டுமின்றி வீடியோகால், மேலும் குழுவாகச் சேர்ந்து பேசும் க்ரூப் சாட் ஆகியவையும் அடக்கம்.

தற்போது வரை இலவசமாக வழங்கப்பட்டு வரும் இந்த சேவைகளுக்கு இனிமேல் கட்டணம் வசூலிக்க வேண்டும் என்ற கோரிக்கையை இந்தியத் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (TRAI), இந்தியத் தொலைத்தொடர்பு துறையிடம் (DOT) கோரிக்கை வைத்துள்ளது.