முதன்முறையாக.. பாலின பாகுபாட்டை அகற்ற அதிரடியான புதிய முயற்சி! அறிமுகப்படுத்திய அரசுப்பள்ளி!



unisex-uniform-scheme-introduced-in-kerala-government-s

கேரளாவில் மாணவர், மாணவிகளுக்கு இடையே ஏற்பட்டுள்ள பாலின பாகுபாட்டை அகற்றும் வகையில் முதல்முறையாக பள்ளி ஒன்றில் ஆண், பெண் இரு பாலினர்களுக்கும் ஒரே மாதிரியான சீருடை வழங்கப்பட்டுள்ளது.

சமீப காலமாக ஆண்,பெண் இருவரும் சமம். இருவருக்கும் சம உரிமை வழங்கப்பட வேண்டும் போன்ற பாலின சமத்துவம் பெருமளவில் பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்தியாவில் பல மாநிலங்களிலும் பள்ளிகளில் மாணவர்கள் மற்றும் மாணவியருக்கு வெவ்வேறு மாதிரியான சீருடைகள் வழங்கப்பட்டுள்ளது.

KERALA

இதற்கிடையில் கேரளாவில் பள்ளி மாணவர்களிடையே பாலின சமத்துவத்தை நிலைநிறுத்த பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதில் முக்கியமான ஒன்றாக, சீருடையில் ஒற்றுமையை காட்டும் வகையில் இரு பாலினத்திற்கும் ஒரே மாதிரியான சீருடை வழங்கப்பட்டுள்ளது.

கோழிக்கோடு மாவட்டம், பாலுச்சேரியில் உள்ள அரசு உயர்நிலை பள்ளி ஒன்றில் பாலின பாகுபாடற்ற  ஒரே மாதிரியான சீருடை செயல்முறை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. அங்கு மாணவிகளும் மாணவர்களைப் போலவே பேண்ட் மற்றும் ஷர்ட் அணிந்து வந்துள்ளனர்.
இதுகுறித்த புகைப்படங்கள் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.