மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ஜே.பி நட்டா ஹெலிகாப்டர் தரையிறங்கும் போது சுவர் இடிந்து விபத்து..!
உத்திரபிரதேசம் மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தல் 7 கட்டமாக நடைபெறுகிறது. 3 கட்ட தேர்தல்கள் நடைபெற்று முடிந்துள்ள நிலையில், இன்று 4 ஆம் கட்ட தேர்தல் நடைபெறுகிறது.
அதனைத்தொடர்ந்து, 27 ஆம் தேதி ஐந்தாம் கட்ட தேர்தலும் நடைபெறுகிறது. இதனால் பாஜக மீண்டும் அம்மாநிலத்தில் ஆட்சியை தக்க வைக்க பாஜக தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது.
பாஜக தலைவர் ஜே.பி நட்டா தேர்தல் பிரச்சாரத்தில் கலந்துகொள்ள ஹெலிகாப்டர் மூலமாக பாலியா மாவட்டத்திற்கு வருகைதந்த நிலையில், அங்குள்ள கல்லூரி மைதானத்தில் ஹெலிகாப்டர் தரையிறக்கப்பட்டது.
ஹெலிகாப்டர் தரையிறங்கும் போது ஏற்பட்ட பலத்த காற்றினால் கல்லூரி சுவர் இடிந்து விழுந்த நிலையில், இவ்விபத்தால் யாருக்கும் எவ்வித காயமும் ஏற்படவில்லை. இந்த விஷயம் தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.