பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
அகோர பசியால் 63 ஸ்பூனை சாப்பிட்ட இளைஞர்.. வயிற்று வலியால் கதறித்துடித்த பரிதாபம்.. அதிர்ந்துபோன மருத்துவர்கள்.!
பசிக்கிறது என்ற காரணத்திற்காக ஸ்பூனில் மேல் பகுதியை நீக்கிவிட்டு கைப்பிடியை சாப்பிட்ட இளைஞர், வயிற்று வலியால் துடித்து 63 ஸ்பூன்கள் அகற்றப்பட்ட பின்னணி குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.
உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள முசாபர் நகரை சேர்ந்த 32 வயது வாலிபருக்கு, அவ்வப்போது வயிற்று வலி ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில், சம்பவத்தன்று அவருக்கு கடுமையான வயிற்று வலி ஏற்படவே, அதற்காக மருந்துகள் சாப்பிடும் வயிற்றுவலி குறையவில்லை.
இதனையடுத்து, அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட இளைஞருக்கு, வயிற்றில் ஸ்கேன் எடுத்து பார்த்த போது வயிறு மற்றும் குடல் பகுதியில் பல ஸ்பூன்கள் இருந்தன.
இதனால் வாலிபருக்கு அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்கள், வயிற்றில் இருந்த ஸ்பூன்களை ஒவ்வொன்றாக எடுத்தனர். இதில், அவரின் வயிற்றில் இருந்து மொத்தமாக 62 ஸ்பூன்கள் அகற்றப்பட்டுள்ளன.
தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட இளைஞர், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து மருத்துவர்கள் கூறுகையில், "எனக்கு பசி இருக்கும் நேரங்களில் உணவு இல்லாத பட்சத்தில் ஸ்பூன்களை சாப்பிடுவேன். முதலில் அதனால் எந்த பிரச்சனையும் ஏற்படவில்லை. ஆனால், வயிறு வலி அதிகரித்துவிட்டது" என்று கூறி மருத்துவர்களை அதிர வைத்துள்ளார்.