#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
சிறுமிக்கு ஸ்வீட் கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்த காமுகன்.. வாயில் சேற்றை திணித்து கொலை செய்த பயங்கரம்..!!
உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள பரேலி மாவட்டத்தில் வசித்துவரும் மின்துறை ஒப்பந்தபணியாளர் ஸ்வீட் கடை நடத்தி வருகிறார். கடந்த சனிக்கிழமையன்று ஸ்வீட் கடையருகில் மனநலம் பாதிக்கப்பட்ட தலித் சிறுமி தனியாக இருந்துள்ளார். இதனைக் கண்ட அவர் சிறுமிக்கு இனிப்பு கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
பின்னர் அங்கிருந்த சேற்றை எடுத்து சிறுமியின் வாயில் அடைக்கவே, சிறுமி சிறிது நேரத்தில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். அவரின் உடல் தண்டவாளத்திலிருந்து மீட்கப்பட்டுள்ள நிலையில், இந்த விஷயம் தொடர்பாக வழக்குபதிவு செய்த காவல்துறையினர் மின் ஊழியரை விசாரணை செய்துள்ளனர்.
அப்போது அவர் குற்றத்தை ஒப்புக்கொள்ளவே, அவர் மீது கொலை, பாலியல் வன்கொடுமை போன்ற பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிந்த காவல்துறையினர் மின் ஒப்பந்த ஊழியரை கைது செய்தனர். மேலும், சிறுமியின் உடல் மற்றும் உடலில் இருக்கும் டி.என்.ஏ மாதிரிகளை தடவயியல் ஆய்வகத்துக்கு அனுப்பியுள்ளனர்.