கொரோனா வைரஸால் ஏற்படும் இழப்பை சரிசெய்ய வேதாந்தா நிறுவனர் 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு!!



Vedanta chief commits 100 cr for corono

உலகம் முழுவதையும் அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸால் பல நாடுகளின் முக்கிய தொழில் வளங்கள் முடங்கி கிடைக்கின்றன. சிறுதொழில் முதல் பெரும் தொழில்கள் வரை அனைத்திலும் சரிவு ஏற்பட்டுள்ளது.

பல நகரங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளதால் தினக்கூலிக்காக வேலை செய்பவர்களின் வருமானம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் அவர்களது வாழ்வாதாரம் முற்றிலும் முடங்கிப் போகியுள்ளது.

Vedanta

இந்த இழப்பினை ஈடுசெய்யும் வகையில் பல முன்னணி தொழில முனைவர்களான பில்கேட்ஸ், ஜாக் மா ஆகியோர் நன்கொடை வழங்கியுள்ளனர். இந்த வரிசையில் உலோகம் மற்றும் சுரங்கத்தொழிலில் முன்னிலையில் இருக்கும் வேதாந்தா நிறுவனத்தின் நிறுவனர் அனில் அகர்வால் 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளார்.

இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், "இந்த கொடிய கொள்ளை நோயினை எதிர்கொள்ள நான் 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்கிறேன். இந்த நேரத்தில் தான் நமது உதவி நம் நாட்டிற்கு தேவை. பலரது வாழ்கை தற்போது பாதிக்கப்பட்டுள்ளது தினக்கூலி பெறுபவர்களை நினைத்து மிகவும் வருத்தமாக உள்ளது, அவர்களுக்கு நம்மால் முயன்ற உலவியை செய்வோம்" என குறிப்பிட்டுள்ளார்.