பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
போலீஸ் அதிகாரியை தாக்க முயற்சித்த இளம்பெண்: குடி போதையில் நடுரோட்டில் அடாவடி..!
அளவுக்கு மீறிய குடிபோதையில் இளம்பெண் ஒருவர் காவல்துறை அதிகாரியை தாக்க முயற்சித்த வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் இரவு நேர ரோந்து பணியில் இருந்த காவல்துறையினர், மது விருந்து முடிந்து நள்ளிரவு நேரத்தில் வாடைகை காரில் வந்த இளம் பெண்கள் சிலரை மடக்கிப் பிடித்துள்ளனர்.
பின்னர் அவர்களை விசாரணை செய்தபோது வெள்ளை நிற டீ-ஷர்ட் அணிந்த இளம்பெண் ஒருவர் காவல்துறை அதிகாரிகளை நோக்கி தகாத வார்த்தையில் பேசியுள்ளார். அதிகபட்ச குடிபோதையில் இருந்த இந்த பெண், காவல்துறை அதிகாரியை தகாத வார்த்தைகளால் சீண்டியதுடன் அவரது தலைமுடியை பிடித்து இழுத்து எட்டி உதைக்கவும் முயற்சி செய்துள்ளார்.
Video 2 pic.twitter.com/GAgxVifzV7
— Kungfu Pande 🇮🇳2.0 (@pb3060) June 19, 2022
மேலும் அந்த அதிகாரி அணிந்திருந்த முக கவசத்தை கழற்றி அதனை கிழிக்க முயற்சி செய்துள்ளார். இதுமட்டுமன்றி நடுரோட்டில் படுத்துக்கொண்டு அந்த இளம்பெண் செய்த அநாகரிகமான செயல்களை அங்கிருந்த வாகன ஓட்டுனர்கள் இணையதளத்தில் பகிர்ந்துள்ளனர். அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.