மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
நான் குழந்தை பெற்று கொள்ளாததற்கு இவர்தான் காரணம்! நீண்ட நாள் ரகசியத்தை போட்டுடைத்த விஜயசாந்தி!
சினிமா உலகில் கல்லுக்குள் ஈரம் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகை விஜயசாந்தி. இவர் ஏராளமான ஆக்சன் திரைப்படங்களில் நடித்துள்ளார். நடிகர்களுக்கு இணையாக சண்டைக்காட்சிகளிலும் மிரட்டியுள்ளார். மேலும் ரஜினி, கமல் போன்ற நடிகர்களுடன் இணைந்து ஏராளமான திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.
அதுமட்டுமின்றி நயன்தாராவிற்கு முன்பு தென்னிந்தியாவின் லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்கப்பட்டவர் நடிகை விஜயசாந்தி. இவர் தமிழ் மட்டுமின்றி மலையாளம்,தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் நடித்துள்ளார். இவரது படத்திற்கெனவே ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.
இந்நிலையில் அவர் சினிமாவில் நடிப்பதை நிறுத்திவிட்டு அரசியலில் ஈடுபட்டார். முதலில் பாஜகவில் தன்னை இணைத்துக் கொண்ட விஜயசாந்தி பின்னர் விலகி 2004 ல் தன்னை காங்கிரஸ் கட்சியில் இணைத்துக் கொண்டார். இவ்வாறு சினிமாவை விட்டு, தீவிர அரசியல் வாழ்க்கையில் ஈடுபட்ட நடிகை விஜயசாந்தி தற்போது நடிகர் மகேஷ் பாபுவுடன் இணைந்து தெலுங்கு படத்தில் நடிக்க உள்ளார்.
இந்நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய விஜயசாந்தி தான் குழந்தை பெற்றுக் கொள்ளாததற்கான காரணம் குறித்து பேசியுள்ளார். அப்போது அவர் கூறுகையில் தமிழக முதல்வர் ஜெயலலிதா குடும்பம், குழந்தையின்றி சுயநலம் இல்லாமல் பொது நலம் கருதி மக்களுக்காக பணியாற்றினார். அவரைப்போலவே அரசியலில் பொதுதொண்டு செய்ய வேண்டும் என்பதற்காகவே திருமணம் செய்து கொள்ளவில்லை. மேலும் இதனை எனது கணவரிடம் கூறியபோது அவரும் ஒத்துக் கொண்டார் எனக் கூறியுள்ளார்.