மதுரை ஸ்டைல் தண்ணி சட்னி..! திரும்ப திரும்ப கேட்டு வாங்கி சாப்பிடுவாங்க.!



madurai-style-delicious-chutney

சட்னி வகைகளில் தேங்காய் சட்னி, கார சட்னி, புதினா சட்னி, வேர்க்கடலை சட்னி என பல வகை உண்டு. இப்போது, வித்தியாசமான முறையில் மதுரை ஸ்டைல் தண்ணி சட்னி எப்படி செய்வது என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

தேவையானப் பொருட்கள் :

பெரிய வெங்காயம் - 2 (நறுக்கியது),

பச்சை மிளகாய் - 2,

காய்ந்த மிளகாய் - 6,

பொட்டுக்கடலை - 1 கப், 

உப்பு - தேவையான அளவு,

நல்லெண்ணெய் - 5 தேக்கரண்டி,

கடுகு - 1/2 தேக்கரண்டி,

வெள்ளை உளுந்து - 1/2 தேக்கரண்டி,

சின்ன சீரகம் - 1/2 தேக்கரண்டி, 

பூண்டு - 10 பல்,

தண்ணீர் - தேவையான அளவு, 

கறிவேப்பிலை - 1 கொத்து.

செய்முறை :

முதலில் அடுப்பைப் பற்ற வைத்து அதில் ஒரு வாணலியை வைக்கவும். பிறகு அதில், 3 தேக்கரண்டி நல்லெண்ணெய் சேர்த்து சூடானதும் 10 பல் பூண்டு, 2 பச்சை மிளகாய், 4 காய்ந்த மிளகாய், 2 பெரிய வெங்காயம் (நறுக்கியது) சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். வெங்காயம் கண்ணாடி பதத்திற்கு வந்ததும் இறக்கி ஆற வைக்கவும். 

இதையும் படிங்க: உடல் எடையை ஈஸியா குறைக்கணுமா? அப்போ இந்த காய்கறிகளை சாப்பிடுவதால் உடம்பில் நடக்கும் அதிசயம் பாருங்க.....

Madurai style

பிறகு, இதனுடன் 1 கப் பொட்டுக்கடலை, தேவையான அளவு உப்பு சேர்த்து ஒரு மிக்சி கப்பில் இவைகளை சேர்த்து நன்றாக அரைக்கவும். போதிய அளவு தண்ணீர் சேர்த்து தண்ணீர் பதத்திற்கு மீண்டும் ஒரு முறை நன்றாக அரைத்து எடுத்துக் கொள்ளவும். பிறகு, அதே வாணலியில் 2 தேக்கரண்டி நல்லெண்ணெய் சேர்த்து சூடானதும், 1/2 தேக்கரண்டி கடுகு, 1/2 தேக்கரண்டி வெள்ளை உளுந்து, 2 காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை 1 கொத்து மற்றும் 1/2 தேக்கரண்டி சின்ன சீரகம் சேர்த்து பொரிந்ததும் தாளித்து விட வேண்டும். 

இப்போது, மதுரை ஸ்டைல் தண்ணி சட்னி தயார். சூடான இட்லி, தோசையுடன் இந்த சட்னியை சேர்த்து சாப்பிட்டால் சுவை அருமையாக இருக்கும்.

இதையும் படிங்க: வீட்டில் அடிக்கடி சண்டையா? மனஅமைதியை பெற்று உங்கள் வாழ்க்கையில் சந்தோசம் பொங்கணுமா ! அப்போ இதெல்லாம் பண்ணுங்க.....