வெப்ப அலையால் உயிருக்கு போராடிய உயிர்கள்; நீர்கொடுத்து உதவிய மக்கள்.! நெகிழவைக்கும் காணொளி.!



due to heat wave Monkey and Bird peoples save Life 

 

மார்ச் மாதத்தின் தொடக்கத்திற்கு பின்னர் இந்தியாவில் படிப்படியாக அதிகரித்து வந்த வெப்பத்தின் தாக்கம், ஏப்ரல் இறுதி மற்றும் மே மாதங்களில் கடும் உச்சத்தில் இருந்தது.

ஒட்டுமொத்த இந்திய அளவிலும் 40 டிகிரி செல்ஸியஸை கடந்து வெப்பம் பதிவாகி வருகிறது. உதிர்ப்பரதேசம், ராஜஸ்தான், புதுடெல்லி, பீகார் ஆகிய மாநிலங்களில் கடும் வெப்பம் அலை மக்களை வாட்டி வதைக்கிறது. 

இதையும் படிங்க: 7ம் கட்ட வாக்குபதிவில் நடந்த பரபரப்பு சம்பவம்; குட்டையில் வீசப்பட்ட ஈவிஎம் மெஷின்.! 

கடும் வெப்ப அலை

தமிழ்நாட்டிலும் கடந்த சில நாட்களாக கோடை மழைக்கு பின் சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கம் காரணமாக மக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். 

குரங்கு, கிளிக்கு உதவிய மக்கள்

இந்நிலையில், உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள காசியாபாத் பகுதியில் மரத்தில் இருந்து வெப்ப அலையால் பரிதவித்து கீழே விழுந்த குரங்கை மீட்ட உள்ளூர் மக்கள், குரங்குக்கு எண்ணெய் தடவி, ஓஆர்எஸ் மருந்தை வழங்கினர். 

மேலும், தாகத்தால் தவித்து உயிருக்கு போராடிய கிளி ஒன்றையும் நீராட வைத்து மக்கள் பாதுகாத்தனர்.

இதையும் படிங்க: ஆக்ரோஷத்தில் இளைஞரின் கட்டை விரலை கடித்து துண்டாக்கிய நாய்; அதிர்ச்சியூட்டும் சம்பவம்.!