தன் வீட்டில் நடந்த மோசமான சம்பவம்.! நடிகை சீதா போலீசில் பரபரப்பு புகார்.! நடந்தது என்ன?
கேரள போலீஸ் அதிரடி! சபரிமலைக்கு பெண்களை ஹெலிகாப்டர் மூலம் அழைத்துச் செல்ல திட்டமா?
சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பைத் தொடர்ந்து இளம் பெண்கள் சந்நிதானம் செல்ல முயன்றனர். அவர்களை இந்து அமைப்பினர் சரணகோஷ போராட்டம் நடத்தித் தடுத்தனர். அதன் பிறகும் அந்தப் பெண்களுக்கு எதிரான போராட்டங்கள் தொடர்ந்து நடந்துவருகின்றன.
இந்நிலையில் மண்டலம்-மகரவிலக்கு பூஜைக்காக நவம்பர் 17ஆம் தேதியிலிருந்து 41 நாட்கள் திறக்கப்படும் சபரிமலைக்கு செல்வதற்காக 10 முதல் 50 வயதுடைய 560 பெண்கள் கேரள போலீஸ் இணையதளத்தில் விண்ணப்பத்துள்ளனர். இதனைத் தொடர்ந்து சபரிமலைக்கு பெண்களை ராணுவ ஹெலிகாப்டர் மூலம் திருவனந்தபுரம் அல்லது கொச்சியில் இருந்து அழைத்துச் செல்ல கேரள போலிசார் முயற்சிகள் எடுத்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதனை நிறைவேற்ற கேரள போலீசாருக்கு வனத்துறையினரின் அனுமதி தேவைப்படும். 1980 ஆம் ஆண்டு முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி சபரிமலைக்கு செல்வதற்காக தயார் செய்த இடத்தை இப்போது பயன்படுத்தலாமா என திட்டமிடுவதாக தெரிகிறது.
இந்நிலையில் இன்று நவம்பர் 13 ஆம் தேதி விசாரிக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்பட்ட சீராய்வு மனுக்கள் ஜனவரி 22 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதால் ஹெலிகாப்டர் மூலம் பெண்களை அழைத்து செல்லும் திட்டம் சாத்தியப்படுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.