மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ஃப்ரிட்ஜ்க்குள் பயங்கரம்... துண்டு துண்டாக வெட்டப்பட்ட பெண் உடல்.!! பதற வைக்கும் சம்பவம்.!!
கர்நாடக மாநிலம் பெங்களூரில் இளம் பெண் ஒருவர் 30 துண்டுகளாக வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள காவல் துறையினர் குற்றவாளியை தீவிரமாக தேடி வருகின்றனர்.
அப்பார்ட்மென்டில் வீசிய துர்நாற்றம்
கர்நாடக தலைநகரான பெங்களூரின் மல்லேஸ்வரம் பகுதியில் அமைந்துள்ள அடுக்குமாடி அப்பார்ட்மெண்ட் ஒன்றில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக அந்த குடியிருப்பில் வசித்து வரும் மக்கள் காவல்துறைக்கு புகார் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து அங்கு வந்த காவல்துறையினர் வீட்டிற்குள் சென்று பரிசோதனை நடத்தினர்.
ஃபிரிட்ஜிக்குள் 30 துண்டுகளாக வெட்டப்பட்ட உடல்
இந்நிலையில் காவல்துறையினர் நடத்திய சோதனையின் போது வீட்டுக்குள் இருந்த ஃப்ரிட்ஜில் இருந்து துர்நாற்றம் வீசியது. இதனைத் தொடர்ந்து ஃப்ரிட்ஜை திறந்து பார்த்தபோது 30 துண்டுகளாக வெட்டப்பட்ட பெண் உடல் புழுக்கள் நெளிந்த நிலையில் மீட்கப்பட்டது. இதனைக் கண்ட காவல்துறையினர் மற்றும் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதையும் படிங்க: 14 வயது சிறுமி கூட்டு பாலியல் பலாத்காரம்... குற்றவாளிகளை காப்பாற்ற நடந்த பேரம்.!! அதிர்ச்சி தகவல்.!!
காவல்துறை விசாரணை
இந்தக் கொடூர சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், நடத்திய விசாரணையில் கொலை செய்யப்பட்ட பெண் 29 வயதான மகாலட்சுமி என தெரிய வந்தது. மேலும் இந்த கொலை சம்பவம் நடந்து ஒரு வாரத்திற்கு மேலாகி இருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர். இந்தப் பெண் எதற்காக கொலை செய்யப்பட்டார்.? கொலையாளி யார்.?என்பது தொடர்பாக காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னையில் பெண் ஒருவர் பல துண்டுகளாக வெட்டி கொலை செய்யப்பட்ட நிலையில் தற்போது பெங்களூரிலும் அதுபோன்ற ஒரு சம்பவம் நடந்திருப்பது பொது மக்களை அதிர்ச்சி அடைய செய்திருக்கிறது.
இதையும் படிங்க: அடக்கொடுமையே... கதற கதற கற்பழிக்கப்பட்ட மூதாட்டி... காமக்கொடூரன் வெறி செயல்.!!