மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
என்னடா இப்படி இறங்கிட்டீங்க.? ... கேரளாவில் பெண்ணின் தந்தையை கொல்ல நூதன முயற்சி... இளைஞர் கைது.!
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் பெண்ணை கிண்டல் செய்ததை தட்டி கேட்ட தந்தையை பாம்பை கடிக்க விட்டு கொலை முயற்சி செய்த சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டு அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகளுக்கு அதே பகுதியைச் சேர்ந்த குண்டு ராவ் என்று அழைக்கப்படும் கிச்சு என்ற இளைஞர் தொல்லை கொடுத்து வந்ததாக தெரிகிறது. இது தொடர்பாக அவரது மகள் ராஜேந்திரனிடம் தெரிவித்ததால் அவர் கிச்சுவை கண்டித்திருக்கிறார்.
இதனால் ஆக்கிரமடைந்த கிச்சு ராஜேந்திரனை கொலை செய்வதற்காக அவரது வீட்டிற்குள் ஜன்னல் வழியாக விஷப்பாம்பை வீசி இருக்கிறார். அதிகாலையில் ஏதோ சத்தம் கேட்டதால் வீட்டில் இருந்தவர்கள் பார்த்தபோது பாம்பு இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அந்த பாம்பை அடித்துக் கொன்றனர்.
பின்னர் வீட்டிற்கு வெளியே வந்து பார்த்தபோது கிச்சு பைக்கில் தப்பிச் சென்றிருக்கிறார். அப்போது அவரது மோட்டார் சைக்கிளின் நம்பரை நோட் செய்த ராஜேந்திரன் இது தொடர்பாக காவல்துறையிடம் புகார் அளித்தார். இந்த புகாரை பெற்றுக் கொண்ட காவல் துறையினர் இது தொடர்பாக விசாரணை செய்து கிச்சுவை கைது செய்து அவர் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.