மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
டெல்லியில் கொடூரம்... தீப்பெட்டி தர மறுத்த இளைஞர் படுகொலை.!! சிறுவர்கள் வெறி செயல்.!!
தலைநகர் டெல்லியில் தீப்பெட்டி தர மறுத்த இளைஞரை 2 சிறுவர்கள் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக கைது செய்யப்பட்ட சிறுவர்களிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
டெல்லியின் திமர்பூர் பகுதியைச் சேர்ந்த இளைஞரிடம் சிகரெட் பிடிப்பதற்காக 2 சிறுவர்கள் தீப்பெட்டி கேட்டுள்ளனர். அதற்கு அந்த இளைஞர் மறுத்ததாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த 2 சிறுவர்கள் அந்த இளைஞரை கத்தியால் குத்தி விட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
இந்த தாக்குதலில் படுகாயம் அடைந்த இளைஞர் ஆட்டோவில் ரத்த வெள்ளத்தில் கடந்துள்ளார். இது பற்றி தகவல் அறிந்த காவல்துறையினர் இளைஞரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அந்த இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதனைத் தொடர்ந்து இளைஞரின் உடலை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த காவல்துறை இந்த சம்பவத்தில் தப்பி ஓடிய 2 சிறுவர்களையும் கைது செய்தனர். அவர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. தீப்பெட்டி தர மறுத்த தகராறில் சிறுவர்களால் இளைஞர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது.