#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
ஜாம்பி போல செயல்படும் மனிதர்கள்; போதைப்பொருள் பயன்பாட்டின் உச்சகட்டத்தால் அதிர்ச்சி.. பகீர் வீடியோ.!
இந்தியாவில் போதைப்பொருள் ஊடுருவல் என்பது, கடந்த 10 ஆண்டுகளாக வெகுவாக அதிகரித்து இருக்கிறது. போதைப்பொருள் தடுப்புப்பிரிவு அதிகாரிகள், அதனை தடுக்க முயன்று பல்வேறு நடவடிக்கை எடுத்தாலும் திரைமறைவில் அவை தொடர்ந்து இந்தியாவில் ஊடுருவி வருகின்றன.
இவ்வாறான போதைப்பொருள் பயன்பாடு காரணமாக, அதனை உட்கொள்ளும் நபர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி வருகிறது. பெரிய நடிகர்களின் மகன், அரசியல் புள்ளிகள், தொழிலதிபர்கள் என நாட்டின் எதிர்கால தூண்களின் அங்கங்களில் தொடங்கி, இளம் தலைமுறை வரை போதைப்பொருள் பயன்பாடு பரவிவிட்டது.
இதையும் படிங்க: துண்டு துண்டாக வெட்டி ரயில்களில் வீசப்பட்ட பெண்.! முதியவரின் வெறிச்செயல்.! திடுக் சம்பவம்!!
போதைப்பொருள் உட்கொண்ட பெண்ணின் அதிர்ச்சி காட்சிகள்
இந்நிலையில், பஞ்சாப் மாநிலத்தில் போதைப்பொருளை அதிகம் உட்கொண்ட பெண்மணி ஒருவர், சாலையில் ஜாம்பி போல செயல்பட்டு பின் இயல்பு நிலைக்கு திரும்பும் அதிர்ச்சி வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த வீடியோ காட்சி, பஞ்சாப் அமிர்தசரஸில் நள்ளிரவு நேரத்தில் வீதியில் சென்ற நபரால் பதிவு செய்யப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.
இந்த விஷயம் குறித்து விபரம் அறிந்தவர்கள் கூறுகையில், போதைப்பொருளில் பலவிதம் இருக்கிறது. ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமாக அவர்களின் உடலால் உட்கொள்ளப்படும். தற்போது ஜாம்பி போல செய்யப்பட வைக்கும் போதைப்பொருள் ஒன்று சந்தையில் ஊடுருவ தொடங்கியுள்ளது என கூறப்படுகிறது.
இதுசார்ந்த போதைப்பொருள், பாதிக்கப்பட்டவரின் மனஓட்டம், இரத்த அழுத்தத்தை நேரடியாக பாதித்து உடலில் மாற்றங்கள் ஏற்படுத்துகிறது என கூறுகிறார்கள். போதைப்பொருளை அளவுக்கு அதிகமாக எடுத்துக்கொண்டாலும், இவ்வாறு அவர்கள் செயல்படுவார்கள் என கூறப்படுவதால் அதிகாரிகள் விசாரணை நடத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
#Shocking videos have emerged from Punjab showing people unable to even stand due to #drug overdoses.
— Sneha Mordani (@snehamordani) June 24, 2024
Video 1 from from Maqboolpura in Amritsar (2022)
Video 2 from Amritsar (2022)
Video 3 again from Amritsar (2024) -- video via @bluntdeep pic.twitter.com/lpsr0Gyd7d
ஆனால், இதனை சித்தரிக்கப்பட்ட வீடியோ காட்சிகள் எனவும் சிலர் கூறுகின்றனர். அதிகாரிகள் விசாரணை நடத்தி கண்டறிந்தால் உண்மை தெரியவரும் என மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
இதையும் படிங்க: 37 வயது பெண்ணை இரண்டு துண்டாக வெட்டிக்கொன்ற 60 வயது கிழவன்; பலாத்காரம் நிறைவேறாததால் கொடூரம்.!