உலகம் எங்கே போனால் என்ன? நான் இருக்கேன்.. அம்மாவின் பாசம்.. நெகிழவைக்கும் வீடியோ.!



Amma Love Trending Video Today 


தமிழில் மூன்றெழுத்து மந்திரமாகவும், கவிதையாகவும் இருப்பது அம்மா. அன்பு, அரவணைப்பு, ஆக்ரோஷம் என பன்முகத்தன்மைக்கு உதாரணமாக இருக்கும் அம்மா, தனது பிள்ளைக்காக எதையும் செய்ய துணிந்தவள். 

அதனாலேயே, மறுஜென்மமாக கருதப்படும் பிரசவத்தையும் அவள் தாண்டி, குழந்தையை பெற்றெடுத்து அன்பை சுமத்துகிறாள். கைக்குள் குழந்தையாக இருப்போர், இறுதிவரையில் அவரை கவனிக்க வேண்டிய பாச பந்தத்தை வைத்திருக்கிறோம்.

இதையும் படிங்க: அப்பா.. எனக்கு கொஞ்சம் கொடுப்பா.. குட்டிக்கு கரும்பை ஒடித்துக் கொடுத்த யானை.. கியூட் வீடியோ வைரல்.! 

இந்நிலையில், பேருந்து நிறுத்தம் ஒன்றில், பெண் ஒருவர் தனது கைக்குழந்தையுடன் கொஞ்சி மகிழும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. ஊர் மக்கள் அவரவர் வேலையை பார்த்து சென்றுகொண்டு இருக்க, தாய் தனது குழந்தையை கொஞ்சிக்கொண்டு இருந்தார். 

இந்த விஷயம் குறித்த வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. வீடியோ எங்கு? யாரால்? எடுக்கப்பட்டது என்பது தொடர்பான தகவல் விசாரிக்கப்படுகிறது. 
 

இதையும் படிங்க: பாம்பு ஒருவரை கடிப்பது இப்படித்தான் நடக்குமா? பதறவைக்கும் வீடியோ.. செருப்புக்கே இந்த நிலையா?