#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
வாழைக்காய் பற்றிய இந்த விஷயம் உங்களுக்கு தெரியுமா.?! அசத்தல் நன்மைகள்.!
வாழைப்பழம் சாப்பிடுவதால் நம் உடலுக்கு பல நன்மைகளை தருவதாக உணவியல் நிபுணர்கள் கூறுகின்றனர். வாழைப்பழத்தை தினமும் நாம் சாப்பிடுவதன் மூலம் உடலை வலுப்படுத்தி பலவீனத்தைப் போக்கி ஆரோக்கியத்திற்கு பெரிதும் வழிவகுக்கின்றது. மேலும் நன்றாக பழுத்த வாழைப்பழத்தை சாப்பிடுவதன் மூலம் நம் உடலுக்கு நல்ல சத்துக்களையும் ஆரோக்கியத்தையும் தருகின்றது.
வாழைப்பழம் சாப்பிட்டு வந்தால் செரிமானப் பிரச்சனைகள் மற்றும் அஜீரணக் கோளாறுகள் நீங்கும். இந்த வாழைக்காய் நீரிழிவு நோய்க்கு அருமருந்தாகவும், சர்க்கரை நோயாளிகளுக்கு சஞ்சீவியாகவும் அமைகிறது.
இந்த வாழைக்காயை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் நமது உடலில் உள்ள இன்சுலின் ஹார்மோனை தூண்டி சர்க்கரை அளவை கட்டுப்படுத்துகிறது. மேலும் இது இரத்த அழுத்தம், பக்கவாதம் மற்றும் மாரடைப்பு போன்ற நோய்கள் வராமல் தடுக்கும். வாழைக்கையில் உள்ள பொட்டாசியம் இரத்த அழுத்த அளவை கட்டுப்படுத்துகிறது. இந்த வாழைக்காயை உணவில் சேர்த்துக் கொண்டால் உங்கள் உடல் பருமனைக் குறைக்க உதவும். இதில் நார்ச்சத்து அதிகம் நிறைந்துள்ளது.
வாழைக்காயில் வைட்டமின் சி, வைட்டமின் கே, வைட்டமின் ஈ மற்றும் வைட்டமின் பி போன்ற பல சத்துக்கள் நிறைந்துள்ளன. எனவே இதனை நாம் தினமும் உணவில் சேர்த்துக் கொண்டால் உடலில் உள்ள மெட்டபாலிசத்தை அதிகரித்து உடல் எடையைக் கட்டுக்குள் வைத்திருக்கும்.
வாழைக்காயில் ஸ்டார்ச் மற்றும் ஆன்டி ஆக்சிடன்ட் அதிகமாக உள்ளது. இந்த வகை ஸ்டார்ச் கரையாத நார்ச்சத்தாக செயல்பட்டு நேரடியாக ஜீரண மண்டலத்தை சென்றடைந்து அங்கு உள்ள நச்சுக்களை வெளியேற்றி அதன் மூலம் வரும் பல நோய்களிலிருந்து காப்பாற்றுகிறது. ஆகவே நாம் தினமும் வாழைப்பழம் அல்லது வாழைக்காய் சாப்பிடுவது உடலில் பல்வேறு வகையிலும் நன்மை பயக்கும் என உணவியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.