ருசியோ ருசி...சுவையான கத்தரிக்காய் சட்னி செய்வது எப்படி...அருமையான டிப்ஸ் இதோ...



Brinjal chutney

உங்கள் வீட்டில் இட்லி, தோசைக்கு ஒரே விதமான சட்னியா செய்கிறீர்களா? இதோ வித்தியாசமான முறையில் புது சுவையுடன் இருக்கும் கத்தரிக்காய் சட்னி. இந்த சட்னியை அனைவர் வீட்டிலும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் அளவிற்கு அதிக சுவை கொண்டது.

கத்தரிக்காய் சட்னி எப்படி செய்வதுனு தெரிந்து கொள்ளுங்கள் :

தேவையான பொருட்கள்:

* எண்ணெய் - 1 டீஸ்பூன்

* உளுத்தம் பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்

* வரமிளகாய் - 3

* பூண்டு - 4 பல் (நறுக்கியது)

* பெரிய கத்திரிக்காய் - 1 (நறுக்கியது)

* மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்

* உப்பு - சுவைக்கேற்ப

* புளி - 1 சிறிய அளவு

* தண்ணீர் - தேவையான அளவு

* சர்க்கரை - 1 டேபிள் ஸ்பூன்

தாளிப்பதற்கு:

* நல்லெண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்

* கடுகு - 1 டீஸ்பூன்

* உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்

* பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை

* கறிவேப்பிலை - சிறிது

செய்முறை :

முதலில் ஒரு கடாய்யை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், உளுத்தம் பருப்பு, வரமிளகாய், பூண்டு சேர்த்து நன்கு வதக்க வேண்டும், பின்னர் அதில் கத்தரிக்காய்  மற்றும் உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து நன்கு வதக்க வேண்டும். பின்னர் நன்கு வதங்கியதும் புளியை சேர்த்து வதக்கி கடாய்யை  இறக்க வேண்டும்.

பின்பு வதக்கிய பொருட்களை குளிர வைத்து  மிக்சர் ஜாரில் போட்டு அரைத்து அதனுடன் சர்க்கரையை சேர்த்து கொள்ள வேண்டும். பின்னர் அரைத்த சட்னியை கடாய்யில் மேலே குறிப்பிட்ட பொருட்களை வைத்து தாளித்தால் சுவையான கத்திரிக்காய் சட்னி ரெடி.