ஆஸ்கரில் இடம்பெற்ற கங்குவா திரைப்படம்; ரசிகர்கள் மகிழ்ச்சி.!
குளிர் காலத்தில் ஆரஞ்சு பழம் சாப்பிடலாமா.. என்ன ஆகும் தெரியுமா.?
குளிர் காலம் நிகழும் போது ஒரு சிலருக்கு மகிழ்ச்சியாக இருந்தாலும் பலருக்கு உடல் மற்றும் மனதளவில் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. குளிரை உடல் மற்றும் மனம் தாங்க முடியாமல் சளி, காய்ச்சல் போன்ற நோயிலிருந்து மனப்பதட்டம், அழுத்தம் போன்ற நோய்கள் வரை உருவாகின்றது.
இந்த குளிர் காலத்தில் நாம் உண்ணும் உணவை கவனமாக எடுத்துக் கொள்ள வேண்டும். ஒரு சில உணவை உண்ணும் போது நம் உடலில் ஏற்படும் நோய்களை அதிகப்படுத்தி விடுகின்றன. மேலும் குளிர்காலத்தில் பழங்கள் அதிகமாக சாப்பிட முடியாது.
இது போன்ற நிலையில், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும் ஆரஞ்சு பழத்தை குளிர் காலத்திலும் எடுத்துக் கொள்ளலாம் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தி வருகின்றனர். ஆரஞ்சு பழம் தினமும் உண்பதன் மூலம் நம் உடலில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து பார்க்கலாம்.
வைட்டமின் டி, ஆன்ட்டிஆக்சிடென்ட்கள், நார் சத்துக்கள் போன்ற பல்வேறு வகையான சத்துக்கள் நிறைந்த ஆரஞ்சு பழத்தை உண்ணும் போது குளிர்காலத்தில் அதிகமாக ஏற்படும் சளி, காய்ச்சல், இருமல் போன்ற நோய்களிலிருந்து தற்காத்துக் கொள்ளலாம்.