பிரியாணியை மீண்டும் சூடேற்றி சாப்பிடுறீங்களா? உச்சகட்ட எச்சரிக்கை உங்களுக்குத்தான்.!



Dont Heat Biryani Once again After Cooking 

 

இன்றளவில் சமைத்த உணவுகளை சாப்பிட பலரும் ஆர்வம் காண்பிப்பது இல்லை. துரித உணவகத்தில் விற்பனை செய்யப்படும் உணவுகள், முன்னதாக தயார் செய்து வைக்கப்பட்ட உணவுகளை சாப்பிடுகிறோம். இவற்றில் உணவுகளை மறுமுறை சூடு செய்து சாப்பிடுவதில் கவனம் என்பது வேண்டும். இந்த விசயம் குறித்து மருத்துவ வல்லுநர்கள் எச்சரிப்பதாவது,

பிரியாணியை பலரும் சமைத்து நீண்ட நேரம் ஆன பின்னர் சூடேற்றி சாப்பிட்டு வருகிறார்கள். இதனால் அதில் கிருமிகள் ஏதும் இருக்காது, அதனை சாப்பிடலாம் என ஆசையாக சாப்பிடுகின்றனர். உண்மையில் இது நல்லதல்ல, பிரியாணியின் சிக்கன் பீசில் வெப்பநிலை முழுவதுமாக செல்லாது. அறிவியல் ரீதியாக 74 டிகிரிக்கு மேல் வெப்பநிலை இருந்தால் நல்லது. 

இதையும் படிங்க: வாயு தொல்லையா.! உடனடி தீர்வு.. இந்த ஒரு லேகியம் போதும்.!?

biryani

மறுசூடு செய்யும் உணவுகள் 74 டிகிரியை கடந்து இருந்தால் பிரச்சனை இல்லை. கிருமிகள் இறந்துவிடும். ஆனால், அலட்சியமாக அரைகுறையாக சூடேற்றி சாப்பிடப்படும் உணவுகள் மற்றும் சூடேற்றமால் சாப்பிடப்படும் உணவுகள் கட்டாயம் விளைவுகளை தரும். ஒருசில நேரம் இவை தீவிர உடல்நல பாதிப்பையும் ஏற்படுத்தலாம். 

எண்ணெய் சூடேறியபின் கொதித்ததும் அமிலமாக மாறும். எண்ணெயை 2 முறை பயன்படுத்தலாம் என சட்டம் கூறினாலும், அசைவ வகை உணவுகளை நாம் சமைத்த பின்னர் இரண்டாவது முறையாக உபயோகம் செய்யப்படும் எண்ணெய் காரணமாக அசிடிட்டி உண்டாகும் என மருத்துவ வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.

இதையும் படிங்க: சாலையோரங்களில் வளரும் இந்த செடியில் இவ்வளவு மருத்துவ குணங்களா.!?