வாயு தொல்லையா.! உடனடி தீர்வு.. இந்த ஒரு லேகியம் போதும்.!?



Home Remedies for gastric problems

வாயு தொல்லைக்கு நிரந்தர தீர்வு

அந்த காலத்தில் இருந்து தற்போது உள்ள காலம் வரை பலரும் அதிகமாக பாதிக்கப்பட்டு வரும் பிரச்சனை தான் வாயு தொல்லை. ஒரு சிலருக்கு பொது இடங்களில் செல்வதற்கே கூச்சமாக இருக்கும் அளவிற்கு வாயு தொல்லை பிரச்சனை அதிகமாக இருக்கும். இந்த வாயு தொல்லை பிரச்சனைக்கு பல ஆங்கில மருந்துகள் இருந்து வந்தாலும் அவை பக்கவிளைவுகளை அதிகமாக தரும் என்பதால் பலரும் இந்த மருந்துகளை எடுத்துக்கொள்ள தயங்குகின்றனர்.

லேகியம்

ஆனால் வாயு தொல்லை பிரச்சனைக்கு வீட்டில் உள்ள பொருட்களை வைத்து எளிதாக தீர்வு காணலாம். வீட்டில் உள்ள சுக்கு, பூண்டு போதும். இதை வைத்து லேகியம் செய்து 14 நாட்கள் சாப்பிட்டு வந்தால் போதும். வாயு தொல்லை பிரச்சனையை நிரந்தரமாக சரி செய்யலாம். இந்த சுக்கு, பூண்டு லேகியத்தை எவ்வாறு செய்யலாம் என்பதை குறித்து பதிவில் விளக்கமாக பார்க்கலாம்?

இதையும் படிங்க: வாயு தொல்லையா.! இந்த ஒரு இலை போதும்.. ஒரே நாளில் தீர்வு.!?

பொதுவாக "சுக்கிற்கு மிஞ்சிய மருந்தில்லை, சுப்பிரமணியத்தை மிஞ்சிய கடவுளும் இல்லை என்ற பழமொழியை பலரும் கேள்விப்பட்டிருப்போம். கடவுளுடன் ஒப்பிட்டு பேசும் அளவிற்கு சுக்கிற்க்கு பல மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளது. இருமல், சளி, காய்ச்சல், தொண்டை கரகரப்பு, நெஞ்சடைப்பு, மூச்சு விட சிரமப்படுதல், வயிற்று வலி என பலவிதமான நோய்களையும் குணப்படுத்தும்.

லேகியம்

சுக்கு

, பூண்டு லேகியம் செய்ய தேவையான பொருட்கள்

தேன் - 2 மேசைக் கரண்டி
மலைப் பூண்டு - 100 கிராம் நல்லெண்ணெய் - 100 மில்லி
மாசுக்கு- 100 கிராம்
கருப்பட்டி -கால் கிலோ
ஏலப்பொடி- சிறிது
செய்முறை
முதலில் சுக்கை மிக்ஸியில் போட்டு தண்ணீர் ஊற்றி நன்றாக அரைக்க வேண்டும். பின்னர் பூண்டை தோல் உரித்து எடுத்து வைத்துக் கொள்ளவும். பின்னர் ஒரு பாத்திரத்தில் கருப்பட்டி போட்டு ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி பாகுபதத்திற்கு காய்ச்சி தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும். பின்பு அடி கனமான ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி பூண்டு போட்டு நன்றாக வதக்கி இதனுடன் அரைத்து வைத்த சுக்கு காய்ச்சி வைத்த கருப்பட்டியை சேர்த்து எண்ணெய் பிரிந்து வரும் வரை கொதிக்க விடவும். என்னை பிரிந்து வந்ததும் இதனை ஒரு காற்று புகாத பாட்டிலில் போட்டு எடுத்து வைத்துக் கொண்டால் தொடர்ந்து 14 நாட்களுக்கு காலை அல்லது மாலை நேரத்தில் ஒரு ஸ்பூன் சாப்பிட்டு வரலாம்.

இதையும் படிங்க: சுகர் லெவல் அதிகரித்துக்கொண்டே போகுதா.! இரவில் இதை குடித்து பாருங்க.!?