உறங்கச் செல்வதற்கு முன் பசி எடுக்கிறதா.? இந்த உணவுகளை மட்டும் எடுத்துக் கொள்ளுங்கள்.!!



feel-hungry-before-sleep-take-these-foods-for-good-heal

இரவு நேரத்தில் தாமதமாக உணவோ அல்லது தின்பண்டங்களையோ உட்கொள்வதால் உடலுக்கு பல்வேறு விதமான தீமைகள் ஏற்படுகிறது. இரவு நேரத்தில் ஸ்னாக்ஸ் சாப்பிடுவதால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிப்பதோடு இதய நோய் வருவதற்கான வாய்ப்புகளும் அதிகமாக இருக்கிறது. எனினும் இரவு நேரத்தில் பசி எடுத்தால் சாப்பிடுவதற்கான ஆரோக்கியமான உணவுகளை பற்றி இந்தப் பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

பால் மற்றும் தானியங்கள்

இரவு நேரத்தில் தூங்குவதற்கு முன் பசி எடுத்தால் பால் மற்றும் தானியங்களை உட்கொள்ளலாம். இவை பசியை போக்குவதோடு உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்குகிறது. மேலும் நல்ல தூக்கம் கிடைக்கவும் உதவி புரிகிறது. இவற்றால் எந்த வித பக்க விளைவுகளும் ஏற்படாது. எனவே இரவு நேரத்தில் தூங்குவதற்கு முன் பசி எடுத்தால் ஸ்னாக்ஸ் மற்றும் துரித உணவுகளை தவிர்த்து விட்டு இதுபோன்ற ஆரோக்கியமான உணவுப் பொருட்களை எடுத்துக் கொள்ளலாம்.

Healthy Foods

பழச்சாறு

இரவு நேரத்தில் பசி எடுக்கும் போது சர்க்கரை சேர்க்காமல் பழச்சாறுகளை அருந்தலாம். இவற்றில் உடலுக்கு தேவையான வைட்டமின்கள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்து இருக்கிறது. மேலும் இந்த பழச்சாறுகள் செயற்கையாக தயாரிக்கப்பட்ட குளிர்பானங்கள் மற்றும் ஸ்னாக்ஸ் போன்று எந்தவித பக்க விளைவுகளையும் ஏற்படுத்தாது. உடலுக்கு தேவையான ஆற்றலை வழங்குவதோடு நம் பசியையும் போக்கி முழுமையான உணர்வை கொடுக்கும்.

இதையும் படிங்க: யம்மி... தித்திக்கும் கேரளா ஸ்டைல் நெய் அப்பம் செய்வது எப்படி.? சிம்பிள் ரெசிபி.!!

தயிர் மற்றும் பழங்கள்

உறங்கச் செல்வதற்கு முன் பசி எடுத்தால் தயிர் மற்றும் பழங்களை எடுத்துக் கொள்ளலாம். இவை ஆரோக்கியமானது மற்றும் பக்க விளைவுகள் இல்லாதது. மேலும் நல்ல சுவையாகவும் இருக்கும். தயிருடன் ஸ்ட்ராபெரி மற்றும் புளுபெர்ரி பழங்களை சேர்த்து சாப்பிடுவது சுவையாக இருப்பதோடு உடலுக்கு நன்மை பயக்கக் கூடியதாகவும் இருக்கிறது.

இதையும் படிங்க: ஏசி அறையில் அதிக நேரம் செலவிடுபவரா நீங்கள்.? இந்தப் பிரச்சினைகள் உங்களை தாக்கலாம்.!!