திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
ஏசி அறையில் அதிக நேரம் செலவிடுபவரா நீங்கள்.? இந்தப் பிரச்சினைகள் உங்களை தாக்கலாம்.!!
ஏர் கண்டிசன் என்றழைக்கப்படும் குளிர்சாதன வசதிகள் இன்று சர்வ சாதாரணமாகிவிட்டது. மேலும் தற்போது நிலவி வரும் காலநிலை ஏசி இல்லாமல் இருக்க முடியாது என்ற சூழ்நிலையை உருவாக்கி இருக்கிறது. கொளுத்தும் வெப்பத்தை சமாளிக்க பெரும்பாலான வீடுகளில் ஏசி பயன்படுத்த தொடங்கி விட்டனர். இந்நிலையில் அதிகமாக ஏசியில் இருப்பதால் நம் உடலில் ஏற்படக்கூடிய பக்க விளைவுகள் என்ன என்பதை இந்த பதிவில் காணலாம்.
நோய் எதிர்ப்பு சக்தி குறைகிறது
குளிரூட்டப்பட்ட அறையில் ஒரே மாதிரியான வெப்ப நிலையில் நீண்ட நேரம் இருப்பதால் நம் உடலானது இயற்கையான நோய் எதிர்ப்பு சக்தியை இழக்கிறது. வெப்ப நிலையில் மாற்றங்கள் இருப்பதால் உடலானது நோய் எதிர்ப்பு ஆற்றலை இழக்கிறது. இதன் காரணமாக எளிதில் தொற்று நோய்க்கு ஆளாகும் வாய்ப்பு அதிகரிக்கிறது.
சுவாச பிரச்சனைகள்
ஏசி மறுசுழற்சி செய்யப்பட்ட காற்றை வழங்குகிறது. இந்தக் காற்றில் கிருமிகள் மற்றும் மாசு போன்றவை இருக்கும். இதனால் சுவாச பிரச்சனை மற்றும் அலர்ஜி ஏற்பட வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது. மேலும் ஏசி காற்றை நீண்ட நேரம் சுவாசிப்பதால் தொண்டை வறட்சி மற்றும் சுவாசக் கோளாறுகள் ஏற்படும் வாய்ப்பு அதிகம்.
இதையும் படிங்க: யம்மி... சுவையான மின்ட் லஸ்ஸி வீட்டிலேயே செய்வது எப்படி.? எளிமையான ரெசிபி.!!
மனச்சோர்வு மற்றும் தலைவலி
ஏசி அறையில் அதிகமாக நேரத்தை செலவிடுபவர்களுக்கு மனச்சோர்வு மற்றும் தலைவலி ஏற்பட வாய்ப்புகள் அதிகம். ஏசி மறுசுழற்சி செய்யப்பட்ட காற்றை பயன்படுத்துகிறது. இதனால் புதிய காற்று கிடைக்காமல் மனச்சோர்வு உண்டாகும். மேலும் தலைவலியையும் ஏற்படுத்தும். எனவே மருத்துவர்கள் அதிக நேரம் ஏசியை பயன்படுத்துவதை தவிர்க்குமாறு அறிவுறுத்துகிறார்கள்.
இதையும் படிங்க: வாவ்.. இது புதுசா இருக்கே.!! பருப்பு இல்லாமல் கமகமக்கும் சாம்பார்.!! சிம்பிள் ரெசிபி.!!