முலாம்பழம் சாப்பிடுவதால் உடலுக்கு இவ்வளவு நன்மைகளா.?



good-things-of-muskmelon

கோடை காலத்தில் மட்டும் பெரும்பாலும் கிடைக்கும் 'முலாம்பழம்' உடலுக்கு தேவையான அத்தனை நன்மைகளையும் கொண்டுள்ளது. இந்தப் பழங்கள் 'கீரணிப் பழங்கள்' என அறியப்படுகின்றன. இதில் நீர்ச்சத்து அதிகம் நிறைந்துள்ளதால் உடலுக்கு நல்ல நீரேற்றியாகவும் பயன்படுகிறது.

Muskmelon

மேலும் உடலுக்கு தேவையான பொட்டாசியம், மக்னீசியம், விட்டமின் ஈ, வைட்டமின் சி மற்றும் இரும்பு சத்து ஆகியவை நிறைந்துள்ளன. மேலும் சிறுநீரகக் கோளாறு உள்ளவர்கள் இதை மருத்துவரின் பரிந்துரையின் பேரில் எடுத்துக்கொள்ள வேண்டும். ஏனெனில் இதில் பொட்டாசியம் நிறைந்துள்ளதால் கவனமாக இருக்க வேண்டும்.

மேலும் இது மலச்சிக்கலை தீர்க்க வல்லது. கண் எரிச்சல் மற்றும் அதீத சோர்வு உள்ளவர்கள் இதை எடுத்துக் கொள்வதனால் அவை நீங்கும். நெஞ்சு மற்றும் வயிற்று பகுதிகளில் எரிச்சல் உள்ளவர்கள் இதை எடுத்துக் கொண்டாலும் அதை தீர்த்து வைக்கலாம்.

Muskmelon

இதில் சர்க்கரை குறைவாக இருப்பதனாலும் உடலுக்கு தேவையான நார்ச்சத்து அதிகமாக இருப்பதனாலும் சர்க்கரை நோய் உள்ளவர்கள் இதை எடுத்துக் கொள்ளலாம். தொடர்ந்து உண்பதனால் நமது சருமம் பொலிவு பெறும்.