தன் வீட்டில் நடந்த மோசமான சம்பவம்.! நடிகை சீதா போலீசில் பரபரப்பு புகார்.! நடந்தது என்ன?
அண்ணாச்சி பழத்தில் கொட்டி கிடக்கும் நன்மைகள்.. வாங்க தெரிஞ்சுக்கலாம்.!
பொதுவாக பழங்கள் சாப்பிடுவது உடலுக்கு பல்வேறு விதமான நன்மைகளை கொடுக்கிறது. ஆனால் ஒரு சில பழங்கள் சாப்பிடுவது கூடுதல் நன்மைகள் கொடுக்கும் என்பதும் அதில் ஒன்றுதான் அண்ணாச்சி பழம். எனவே, அண்ணாச்சி பழம் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பது குறித்து இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்ளலாம்.
அண்ணாச்சி பழத்தில் வைட்டமின் சி சக்தி நிறைந்துள்ளதால் காயங்கள் ஏற்பட்டால் உடனடியாக குணமாகும். அதேபோல் அண்ணாச்சி பழத்தில் உள்ள கால்சியம் மற்றும் மெக்னீசியம் எலும்புகளை வலிமையாக வைத்திருக்க உதவுகிறது.
அண்ணாச்சி பழத்தை வெட்டி உப்பு கலந்த தண்ணீரில் ஊறவைத்து சாப்பிட்டால் அதன் ருசி நன்றாக இருக்கும். அதேபோல், அண்ணாச்சி பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் மூளை கோளாறு மற்றும் ஞாபக சக்தி குறைவு போன்றவை குணமாகும்.
அண்ணாச்சி பழத்தில் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் நிறைய நன்மைகள் கிடைக்கும். மேலும் ஒற்றை தலைவலி ஏற்பட்டால் அன்னாசிப்பழம் சாப்பிடுவது நல்ல தீர்வளிக்கிறது.
குறிப்பாக பெண்களுக்கு வெள்ளைப்படுதல் மற்றும் சிறுநீர் எரிச்சல் போன்ற பிரச்சனைகள் உள்ளவர்கள் அன்னாசி பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் நல்ல பலன் அளிக்கிறது. அண்ணாச்சி பழம் இதய நோய் மற்றும் மாரடைப்பில் இருந்தும் பாதுகாக்கிறது.