Toxic: யாஷ் பிறந்தநாள் கொண்டாட்டம்.. டாக்சிக் படத்தின் அசத்தல் கிலிம்ப்ஸ் வீடியோ.!
வெறுத்து ஒதுக்கும் பாகற்காயில் கொட்டிக்கிடக்கும் மருத்துவ நன்மைகள்!
பொதுவாக பாகற்காய் கசப்பாக இருந்தாலும் பல்வேறு வகையான நோய்களை விரட்டும் மருத்துவ பண்புகளை கொண்டுள்ளது. எனவே, பாகற்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்ளலாம்.
பாகற்காயில் உள்ள சரோகின் என்ற வேதிப்பொருள் ரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் அளவை கட்டுப்படுத்த உதவுகிறது. எனவே சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு இது சிறந்த காய்கறியாக பயன்படுகிறது.
பாகற்காயில் நார்சத்து நிறைந்துள்ளதால் செரிமானத்தை மேம்படுத்தி, மலச்சிக்கலை போக்க உதவுகிறது. பாகற்காயில் உள்ள பொட்டாசியம் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த உதவுகிறது.
பாகற்காயில் கலோரிகள் குறைவாகவும், நார்சத்து அதிகமாகவும் இருப்பதால் உடல் எடையை குறைக்க விரும்புபவர்களுக்கு சிறந்த உணவாகும். இதில், உள்ள வைட்டமின் சி மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பயன்படுகிறது.
பாகற்காயில் உள்ள வைட்டமின் சி தோல் ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது. அதேபோல் பாகற்காயில் உள்ள ஊட்டச்சத்துக்கள் முடி வளர்ச்சியை ஊக்குவித்து, முடி உதிர்தலை தடுக்க உதவுகிறது. குறிப்பாக பாகற்காயில் உள்ள வைட்டமின் ஏ கண் பார்வைக்கு உதவுகிறது.