தினமும் காலையில் கேழ்வரகு கூழ் குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா? எடை குறைய இதை பன்னுங்க.!



health-benefits-of-kezhvaragu-koozh

அந்த காலத்தில் நமது முன்னோர்கள் உணவே மருந்து என்ற பழமொழியை பின்பற்றி வாழ்க்கை வாழ்ந்து வந்தனர். அதனால் அவர்கள் நோய் நொடியின்றி நூறு வயதுக்கு மேல் ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ்ந்து வந்தனர். ஆனால் தற்போதைய காலத்தில் உணவே மருந்து என்பதற்கு பதிலாக, உணவே விஷம் என்ற அளவுக்கு மாறியுள்ளது.

அதன்படி அந்த காலத்தில் முக்கிய உணவாக கம்பு கூழ், கேழ்வரகு கூழ் போன்றவற்றை உணவாக உண்டு வாழ்ந்து வந்தனர். இந்த உணவு வகைகள் உடலுக்கு தேவையான அத்தனை ஊட்டச்சத்துக்களையும் அளிக்கும் ஆற்றலுடையது.

health tips

ஆனால் தற்போது தினமும் காலையில் காபி மற்றும் டீ குடித்து வருகின்றனர். இதற்கு பதிலாக தினமும் காலையில் கேழ்வரகு கூழ் குடித்து வந்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து நோய் கிருமிகளில் இருந்து நம்மை பாதுகாக்கும். குறிப்பாக வெயில் காலத்தில் உடல் சூட்டை குறைத்து உடலை குளிர்ச்சியாக வைக்க உதவும்.

உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் கேழ்வரகு கூழ் தினமும் காலையில் குடிப்பதால் நல்ல பலன் அளிக்கும். கேழ்வரகில் லிசிடின், அமினோ அமிலங்கள், இரும்பு சத்து மற்றும் ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்கள் போன்றவை நிறைந்துள்ளதால் கல்லீரலில் உள்ள நச்சுப் பொருட்களை வெளியேற்ற உதவுகிறது.

health tips

கர்ப்பிணி பெண்கள் மற்றும் குழந்தைகள் கேழ்வரகு கூழ் தினமும் குடித்து வந்தால் ஹீமோகுளோபின் அதிகரிக்கும். அதேபோல் இரும்பு சத்தும் அதிகரிக்கும். எனவே சத்துக்கள் நிறைந்த கேழ்வரகு கூழ் குடித்து வந்தால் நோய் நொடி இல்லாமல் நீண்ட ஆயுளுடன் வாழலாம்.