தினமும் காலையில் ஊற வைத்த பாதாமை சாப்பிட்டு வந்தால், உடலில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படும் தெரியுமா.!?



Health benefits of soaked badham

ஊட்டச்சத்து தரும் ஊற வைத்த பாதாம்

பொதுவாக பாதாம் சாப்பிடுவது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்குமே நல்லது. அந்த அளவிற்கு ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது என்பதால் மருத்துவர்களும் இதை அடிக்கடி சாப்பிட வேண்டும் என்று அறிவுறுத்து வருகின்றனர். இந்த பாதாமை தினமும் ஊறவைத்து சாப்பிட்டு வந்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை குறித்து பதிவில் விளக்கமாக பார்க்கலாம்?

Badham

ஊற

வைத்த பாதாம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்

வைட்டமின் ஈ, ஆன்டி ஆக்ஸிடென்ட்கள், கொழுப்பு சத்துக்கள் போன்றவை நிறைந்துள்ளதால் பாதாமை ஊறவைத்து சாப்பிடும் போது நம் சருமத்திற்கு பளபளப்பையும் தருவதோடு, தோலில் ஏற்படும் பாதிப்புகளையும் வராமல் பாதுகாக்கிறது. மேலும் தோலில் கொலாஜன் உற்பத்தியை அதிகரித்து ஆக்சிஜனேற்ற சேதத்தில் இருந்து பாதுகாப்பதோடு, சருமத்தை ஈரப்பதமாக வைத்திருக்க உதவுகிறது.

இதையும் படிங்க: ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுப்படுத்த கோதுமை மாவுடன் இந்த ஒரு பொருளை சேர்த்து சாப்பிட்டு பாருங்க.!?

ஊற வைத்த பாதாமில் நீர்ச்சத்து அதிகமாக இருப்பதால் இது நம் உடலை வறட்சி அடையாமல் செய்கிறது. நம் உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி உடல் உறுப்புகள் சீராக செயல்பட உதவுகிறது. ஒரு சிலர் சிறு வயதிலேயே வயதான தோற்றத்தை கொண்டிருப்பார்கள். அத்தகையவர்கள் பாதாமை ஊறவைத்து சாப்பிடுவதன் மூலம் வயதான போதிலும் இளமையாக தோற்றமளிக்கலாம்.

Badham

மேலும் இதில் ஆன்டி ஆக்ஸிடென்ட்கள் அதிகம் உற்பத்தியாகுவதால் ஹைப்பர் பிக்மின்டேஷன், கரும்புள்ளி, முகப்பருக்கள் போன்றவை ஏற்படாமல் பாதுகாப்பதோடு முகத்தில் உள்ள தழும்புகள், காயங்களை மறையவும் செய்கிறது. உடலில் ஏற்படும் இயக்கங்களை குறைப்பதற்கு ஊற வைத்த பாதாமை அடிக்கடி சாப்பிட்டு வரலாம். இவ்வாறு பல்வேறு நன்மைகள் உடைய பாதாம் பருப்பை சாப்பிடுவது நம் உடலுக்கு மிகவும் நல்லது.

இதையும் படிங்க: தினமும் ஒரு கைப்பிடி பொட்டுக்கடலை சாப்பிட்டு வந்தால் இவ்வளவு நன்மைகளா.!?