தினமும் ஒரு கைப்பிடி பொட்டுக்கடலை சாப்பிட்டு வந்தால் இவ்வளவு நன்மைகளா.!?
பொட்டுக்கடலையில் உடலுக்கு நன்மை தரும் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது என்பதால் இதை அடிக்கடி சாப்பிட வேண்டும். மேலும் பெண்கள், குழந்தைகள், உடல்நலம் சரியில்லாதவர்கள், உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் போன்ற பலருக்கும் பொட்டுக்கடலை மிகவும் ஊட்டச்சத்தான உணவுப் பொருளாக இருந்து வருகிறது. பொட்டுக்கடலை சாப்பிடுவதால் உடலில் ஏற்படும் நன்மைகள் குறித்து இவ்வாறு விளக்கமாக பார்க்கலாம்.
பொட்டுக்கடலை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்
1. பொட்டுக்கடலையில் புரதம் மற்றும் நார்ச்சத்து அதிகமாக இருப்பதால் உடலில் கலோரிகளை குறைத்து உடல் எடையை கட்டுக்குள் வைக்க உதவுகிறது.
இதையும் படிங்க: இதய தமனிகளின் சேரும் கெட்ட கொழுப்புகளை கரைக்கும் சியா விதைகள்.? எப்படி பயன்படுத்தணும் தெரியுமா.!?
2. பொட்டுக்கடலையில் 18.64கி புரோட்டின் மற்றும் 16.8கி நார்ச்சத்து இருப்பதால் இதை உட்கொள்ளும் போது உடலில் உள்ள கொழுப்புகள் எளிதாக வெளியேறிவிடும்.
3. வறுத்த பொட்டுக்கடலையில் போலிட், மாங்கனிஸ், பாஸ்பரஸ், காப்பர் போன்ற சத்துக்கள் இருப்பதால் இதய நோய் ஏற்படாமல் பாதுகாக்கிறது.
4. வறுத்தப் பொட்டுக்கடலை சாப்பிடும் போது உடலில் உள்ள குளுக்கோஸ் அளவு குறையாமல் பார்த்துக் கொள்கிறது.
5. நீரிழிவு நோயாளிகள் தொடர்ந்து பொட்டுக்கடலையை சாப்பிடுவதன் மூலம் உடலுக்கு நன்மை தரும்.
6. பொட்டுக்கடலை பசியை கட்டுப்படுத்துவதால் உடல் எடை அதிகரிக்காமல் இருக்கும்.
7. கர்ப்பிணி பெண் பொட்டுக்கடலையை சாப்பிட்டு வந்தால் ஹீமோகுளோபின், இரும்புச்சத்து போன்றவை அதிகரிக்கும்.
8. செரிமான மண்டலத்தை சீர்படுத்தி, மலச்சிக்கல் பிரச்சனை ஏற்படாமல் பாதுகாக்கிறது.
9. பொட்டுக்கடலையில் உள்ள வைட்டமின் மற்றும் கால்சியம் சத்துக்கள் எலும்புகள், தசைகள், நரம்புகள் போன்றவை வலுப்பெறுவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
10. மாதவிடாய் நேரத்தில் வயிறு வலி, அதிக உதிரப்போக்கு இருப்பவர்கள் பொட்டுக்கடலையை தினமும் காலையில் சாப்பிட்டு வர நல்ல பலன் கிடைக்கும்.
11. தலைமுடி அடர்த்தியாகவும், நீளமாகவும் வளர பொட்டுக்கடலையை சாப்பிட்டு வரலாம். இவ்வாறு பல்வேறு நன்மைகளையுடைய பொட்டுக்கடலையை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிட்டு வந்தால் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைத்து நோய் நொடியின்றி வாழலாம்.
இதையும் படிங்க: "இயற்கையின் மிகச்சிறந்த வரப்பிரசாதம் மண்பானை தண்ணீர்" மண்பானையில் தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்.!?