ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுப்படுத்த கோதுமை மாவுடன் இந்த ஒரு பொருளை சேர்த்து சாப்பிட்டு பாருங்க.!?
நீரிழிவு நோய்
தற்போதுள்ள நவீன காலகட்டத்தில் உணவுப்பொருட்களினாலும், மாறிவரும் வாழ்க்கை முறையினாலும் பலருக்கும் நோய் பாதிப்புகள் பெருகி வருகின்றன. இதில் குறிப்பாக சர்க்கரை நோய் என்பது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலரையும் பாதித்து வருகிறது. உடலில் இன்சுலின் அளவு குறைவதால் நாம் உண்ணும் உணவை போதுமான அளவு செரிமானம் செய்வதற்கு முடியாமல் போகிறது. இதனால் உடலில் சர்க்கரை நோய் பாதிப்பு ஏற்படுகிறது. இந்த சர்க்கரை நோயை கட்டுப்படுத்துவதற்கு பல மருந்து, மாத்திரைகள் இருந்து வருகின்றனர். ஆனால் இது பக்க விளைவுகளையும் ஏற்படுத்துகிறது.
தவிர்க்க வேண்டிய உணவுகள்
சர்க்கரை நோய் இருப்பவர்கள் மாவுச்சத்து, இனிப்புச் சத்து போன்றவை உள்ள உணவுப் பொருட்களை தவிர்க்க வேண்டும். குறிப்பாக அரிசி உணவுகளை அதிகமாக எடுத்துக் கொள்ளக் கூடாது. மண்ணிற்கு கீழ் விளையும் கிழங்கு வகைகளை கண்டிப்பாக சேர்த்துக் கொள்ளக் கூடாது. கோதுமையில் செய்த உணவுகளை எடுத்துக் கொள்ளலாம். ஆனால் இதில் க்ளூட்டன் என்ற அமிலம் இருப்பதால் இது ரத்தத்தில் உள்ள சர்க்கரையை அதிகரிக்கும் என்பதால் கோதுமையும் அதிகம் எடுத்துக் கொள்ளக் கூடாது.
கோதுமையுடன் இந்த பொருள் கலந்து சாப்பிடுங்க
கோதுமை ரொட்டி போன்றவற்றை நீரிழிவு நோய் உள்ளவர்கள் அடிக்கடி சாப்பிடுவதை பார்த்திருப்போம். ஆனால் இதுவும் அவர்களின் உடல்நலத்திற்கு கேடை விளைவிக்கும் என்பதால் கோதுமை மாவில் பாதாமை அரைத்து பொடியாக சேர்த்து சாப்பிடுவதன் மூலம் இதில் உள்ள அதிகப்படியான க்ளுட்டன் உடலில் கலக்காமல் கட்டுப்படுத்தப்படும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தி வருகின்றனர்.