சிறுநீரகத்தை பாதுகாக்கும் சுரைக்காயின் நன்மைகள் தெரியுமா? வாங்க தெரிஞ்சுக்கலாம்!



Health benefits of suraikai

சுரைக்காய் சாப்பிட்டால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பது குறித்து இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்ளலாம். சுரைக்காயில் வைட்டமின்கள், தாதுக்கள், நாசத்துக்கள் மற்றும் நீர் சத்து போன்ற ஏராளமான சத்துக்கள் நிறைந்துள்ளது.

எனவே சுரைக்காய் அடிக்கடி சாப்பிட்டு வந்தால் உடலுக்கு பல்வேறு வழிகளில் நன்மைகள் கொடுக்கும். அதன்படி சுரைக்காயில் குறைந்த கலோரிகள் மற்றும் கொழுப்புகள் உள்ளது. 

Bottle Gourd

சுரைக்காயில் அதிக அளவு நார்சத்து உள்ளதால், செரிமானத்தை மேம்படுத்துவதோடு, பசி உணர்வை தடுக்கவும் உதவுகிறது. எனவே உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் சுரைக்காயை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.

சுரைக்காயில் உள்ள நீர் சத்து மற்றும் பிற சத்துக்கள் சிறுநீரகங்களை பாதுகாத்து ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. குறிப்பாக சுரைக்காய் சிறுநீரக கற்களை உருவாக விடாமல் தடுக்க உதவுகிறது.

Bottle Gourd

சுவைக்காயில் உள்ள பொட்டாசியம் ரத்த அழுத்தத்தை குறைக்க உதவுகிறது. சுரைக்காயில் உள்ள வைட்டமின்கள் எதையா தசைகளை வலுப்படுத்த உதவுகிறது. மேலும் இது மலச்சிக்கலை போக்கவும் உதவுகிறது.

சுரைக்காயில் உள்ள வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் சருமத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகின்றன. குறிப்பாக சுரைக்காய் உள்ள நீர் சத்து சருமத்தை ஈரப்பதமாக வைத்து பாதுகாக்கிறது.