கோடை காலத்தில் இரத்த அழுத்த பாதிப்பு அதிகரிக்கும் அபாயம்.? என்ன காரணம்.!?



High blood pressure increases in summer

பொதுவாக குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கோடை காலம் வந்து விட்டாலே மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர். வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் போது உடலில் ஊட்டச்சத்து குறைபாடு ஏற்பட்டு பல வகையான நோய் பாதிப்புகள் ஏற்படுகின்றன. குறிப்பாக கோடைகாலத்தில் உயர் ரத்த அழுத்தம் பாதிப்பு அதிகமாகி வருவதாக பல்கலைக்கழக ஆய்வில் தெரியவந்துள்ளது. இதனை கட்டுப்படுத்தும் வழிமுறைகளை இப்பதிவில் விளக்கமாக பார்க்கலாம்?

summer

குளிர்காலத்தில் நம் இதயத்தில் உள்ள தமனிகள் மற்றும் ரத்த நாளங்கள் சீரான நிலையை விட சற்று சுருங்கி காணப்படும். இதே போலவே கோடை காலத்தில் ரத்த நாளங்கள் மற்றும் தமனிகள் அதிகமாக விரிவடையும். இதனால் உயர் ரத்த அழுத்த பாதிப்பு ஏற்படுவதோடு, இதயம் சம்பந்தப்பட்ட நோய்களும் உண்டாகிறது.

நம் உடலில் அதிகமாக வெப்ப தாக்கம் ஏற்பட்டால் உடல் தானாகவே குளிர்வித்து ரத்த ஓட்டத்தை அதிகரிக்க வைக்கிறது. இவ்வாறு இரத்த அழுத்தத்தை தற்காலிகமாக நிறுத்த நம் உடல் தானாகவே முயற்சி செய்கிறது. மேலும் உடலில் நீர்ச்சத்து குறைபாடு ஏற்பட்டு ரத்த ஓட்டம் சீராக செயல்படாமல் இருப்பதாலும் ரத்த அழுத்தம் உருவாகிறது. இதனால் உடலில் நீர்ச்சத்து குறைபாடு ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

summer

உடலை எப்போதும் நீரேற்றத்துடன் வைத்துக் கொள்வதன் மூலம் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தலாம். மேலும் இளநீர், பழச்சாறு போன்றவற்றை அடிக்கடி குடித்து வருவதன் மூலம் இப்பிரச்சனை குறையும். மேலும் நீரேற்றத்தை குறைக்கும் ஆல்கஹால், கார்பனேட்டட் பானங்கள் போன்றவற்றை குடிப்பதை தவிர்க்க வேண்டும். நீண்ட நேரம் வெப்பத்தில் இருப்பதை தவிர்க்க வேண்டும். உடலை குளிர்ச்சியாக வைத்துக்கொள்ள வேண்டும். உப்பு சேர்த்த உணவுகளை அதிகம் உண்பதை தவிர்ப்பதன் மூலம் கோடை காலத்தில் வரும் ரத்த அழுத்த பிரச்சனையை கட்டுப்படுத்தலாம்.