ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க வேண்டுமா? இந்த உணவுகளை ட்ரை பண்ணுங்க.!
ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு என்பது ஆண்களுக்கு 13.5 முதல் 17.5 வரை இருக்க வேண்டும். பெண்களுக்கு 12 முதல் 15.5 வரை இருக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். ஹீமோகுளோபின் அளவு குறைய குறைய பல்வேறு நோய்கள் வரும் என்பதால் ஹீமோகுளோபின் அளவை சரியான உணவு பழக்க வழக்கங்கள் மூலம் அதிகரித்துக் கொள்ள வேண்டும்.
எனவே தினமும் மாதுளம் பழம் சாப்பிட்டால் ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு அதிகரிப்பது மட்டுமில்லாமல் இரும்பு சத்து மற்றும் கால்சியம் ஆகிய சத்துக்கள் கிடைக்கும்.
அதேபோல் தினமும் 3 பேரிச்சம்பழம் சாப்பிட்டு வந்தால் ஹீமோகுளோபின் அதிகரிக்கும். குறிப்பாக ஆட்டின் சுவரொட்டி தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் ஹீமோகுளோபின் அளவு கணிசமாக அதிகரிக்கும்.
அன்றாட உணவில் பீட்ரூட் சேர்த்துக் கொள்வதால் ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்க உதவுகிறது. மேலும் பருப்பு, வேர்க்கடலை, பட்டாணி மற்றும் பீன்ஸ் போன்ற பொருட்களை உணவில் சேர்த்து வந்தால் ரத்த சிவப்பணுக்களின் அளவை அதிகரிக்க உதவி செய்கிறது.