3 நாட்களில் ரூ.127.64 கோடி.. கங்குவா திரைப்படத்தின் நிலவரம்.!
புகை பிடிப்பவர்களே உங்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி! இப்போவே இத பண்ணுங்க!
புகைபிடிப்பது உடலநலத்திற்கு மிகவும் கொடியது. ஒவொரு சிகரெட் பொட்டலத்திலும் கூட இந்த வசனம் எழுதியிருப்பதை நீங்கள் பார்த்திருப்பீர்கள்.
புகைபிடிப்பது மதுவை விட கொடிய பழக்கம். நம்மிடம் இருக்கும் அனைதுவிதமானா கெட்ட பழக்கங்களையும் நாம் எளிதில் கைவிடலாம், ஆனால் இந்த புகை பிடிப்பதை மட்டும் கைவிடுத்துவது சற்று கடினம்.
ஒரு சில உணவு பழக்கவழக்கங்களை கையாள்வதன் மூலம் இந்த பழக்கத்தில் இருந்து வெளிவரலாம்.
சில உணவுகள் புகைப்பழக்கத்தை கட்டுப்படுத்தும் என ஆய்வில் தெரியவந்துள்ளது.
தக்காளி
நாம் அன்றாடம் நமது உணவில் சேர்த்துக்கொள்ளும் பொருட்களில் ஓன்று தக்காளி. தக்காளி நுரையீரல் ஆரோக்கியத்துக்கு மிகவும் முக்கியமானது. தக்காளியில் அதிக ஆன்டி ஆக்சிடண்டுகள் உள்ளன. இது நமது நுரையீரலின் ஆரோக்கியத்தை மிகவும் மேம்படுத்த உதவுகிறது.
வாழைப்பழம்
வாழைப்பழத்திலும் அதிக அளவில் ஆன்டி ஆக்சிடண்ட்டுகள் உள்ளன. இதுவும் நுரையீரலைப் பாதுகாக்கும்.
ஆப்பிள்
ஆப்பிளும் நுரையீரலுக்கு நல்லது. ஆப்பிளில் உள்ள ஆன்டி ஆக்சிடண்ட்டுகள் நுரையீரலுக்கு நலம் அளிப்பதோடு சுவாசப் பிரச்சினைகளையும், மூச்சுத் திணறலையும் நீக்குகிறது. இதுபோன்ற ஆன்டி- இன்ஃபிளமேட்ரி திறன் கொண்ட காய்கறிகள், பழங்களும் நுரையீரல் பிரச்சினைகளுக்கு தீர்வளிக்கும்.
தக்காளி, வாழைப்பழம், ஆப்பிள் ஆகியவற்றை உணவில் அதிகமாகச் சேர்த்துக் கொள்ளத் தொடங்கியபின் புகைப்பழக்கத்தைக் கட்டுப்படுத்தத் தொடங்கிவிடும் என்கின்றனர் மருத்துவர்கள். மேலும் நுரையீரலில் நச்சுக்களை வெளியேற்றத் தொடங்குவதோடு நுரையீரலில் உள்ள இறந்த செல்களை வெளியேற்றி, புதிய செல்களை உருவாக்குவதாகவும் கூறுகிறார்கள்.