மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
என்ன முருங்கைக் கீரையில் பருப்பு அடையா.? புதுசா இருக்கே.! இப்பவே டிரை பன்னுங்க.!
மிகவும் டேஸ்ட்டான ஆரோக்கியம் மிக்க பருப்பு அடையை இப்படி செய்து சாப்பிட்டால், ஆரோக்கியம் நன்றாக இருக்கும். இந்த பருப்பு அடையை செய்வது எப்படி என்பது குறித்து தற்போது நாம் தெரிந்து கொள்ளலாம்.
தேவையான பொருட்கள் :
உப்பு - தேவையான அளவு
முருங்கை கீரை - தேவையான அளவு
கருவேப்பிலை - தேவையான அளவு
வெங்காயம் - 2
பூண்டு - தேவையான அளவு
பச்சை மிளகாய் - 2
வர மிளகாய் - 5
பெருங்காயம் - 1\2 டீஸ்பூன்
மஞ்சள் பொடி -1\2 டீஸ்பூன்
துவரம் பருப்பு - 1/2 கப்
கடலைப்பருப்பு - 1/2 கப்
பச்சரிசி - 1 கப்
செய்முறை :
கடலை பருப்பு, துவரம் பருப்பு, பச்சரிசி போன்றவற்றை 2 மணி நேரம் நன்றாக ஊற வைத்து, அதன்பின் அதிலுள்ள நீரை வடிகட்டி கொண்டு, அத்துடன் உப்பு, பச்சை மிளகாய், வரமிளகாய், பெருங்காயம், மஞ்சள் பொடி போன்றவற்றை சேர்த்து நன்றாக அரைக்க வேண்டும்.
அதன் பின் கருவேப்பிலை, முருங்கைக்கீரை, பூண்டு, வெங்காயம் போன்றவற்றை சேர்த்து அரைத்து வைத்த மாவில் போட்டுக் கொள்ளவும். அதன் பின்பு, அதை நன்றாக கலக்கி தோசை கல்லை அடுப்பில் வைத்து, தோசை கல் சூடானவுடன் அரைத்து வைத்திருக்கின்ற மாவை தேவைப்படும் வடிவில் கல்லில் ஊற்ற வேண்டும்.
ஒருபுறம் நன்றாக வெந்தவுடன், நடுவில் ஓட்டையிட்டு அதில் சிறிது எண்ணெய் விட வேண்டும். அடுத்ததாக அடையை திருப்பிப் போட்டு, வேக வைத்து எடுத்தால் சுவையான முருங்கை கீரை அடை தயாராகிவிடும். இந்த அடைக்கு இட்லி மிளகாய் பொடி, வெல்லம் போன்றவற்றை சேர்த்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.