#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
இஞ்சி பூண்டு மட்டும் போதும்.! 10 நிமிடத்தில் அருமையான சட்னி ரெடி.!
சுவையான பூண்டு, இஞ்சி சட்னி செய்வது எப்படி என்பது குறித்து தற்போது நாம் தெரிந்து கொள்ளலாம்.
தேவையான பொருட்கள் :
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 2 டீஸ்பூன்
வெல்லம் - சிறிதளவு
கடுகு , உளுத்தம் பருப்பு-சிறிதளவு
புளி - தேவையான அளவு
காய்ந்த மிளகாய் - 10
பூண்டு - 20 பல்
இஞ்சி துண்டுகள் - 1 கப்
செய்முறை :
ஒரு கடாயை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி, எண்ணெய் சூடானவுடன் சுத்தம் செய்து, நறுக்கி வைத்துள்ள பூண்டு, இஞ்சி, காய்ந்த மிளகாய், உப்பு, புளி போன்றவற்றை சேர்த்து வதக்கிக் கொள்ளுங்கள். அதன்பின் அடுப்பிலிருந்து இறக்கி வைத்து, அதனை நன்றாக ஆற வைக்க வேண்டும்.
அந்த கலவை நன்றாக ஆறிய பின்பு அதனை மிக்ஸியில் போட்டு, சிறிதளவு உப்பும், வெல்லமும் சேர்த்து, தண்ணீர் ஊற்றி அரைக்க வேண்டும்.
பின்பு கடாயில் 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி உளுத்தம் பருப்பு, கடுகு போன்றவற்றை போட்டு, தாளித்து, அரைத்து வைத்துள்ள கலவையில் சேர்த்துக் கொள்ளவும். இப்போது சுவையான இஞ்சி, பூண்டு சட்னி தயாராகிவிடும்.