3 நாட்களில் ரூ.127.64 கோடி.. கங்குவா திரைப்படத்தின் நிலவரம்.!
எப்போதும் கவலையாக இருப்பவரா நீங்கள்..? இதை முதல்ல தெரிஞ்சிக்கோங்க.!
எப்போதும் சோகம்
சிலர் எப்போதும் கவலையுடன் முகத்தை சோகமாக வைத்துக் கொண்டு இருப்பார்கள். தான் ஏன் சோகமாக இருக்கிறோம் என்ற காரணம் கூட அவர்களுக்கு தெரியாது. அவர்களது சில பழக்கங்கள் மிகவும் மோசமானது என்பதை உணராமல் அதை தொடர்ந்து செய்து கொண்டே அவர்கள் கவலையுடன் சுற்றி தெரிவார்கள். இந்த மோசமான பழக்கங்களை அவர்கள் கைவிட்டு விட்டாலே அவர்களால் சந்தோஷமாக இருக்க முடியும்.
நேர்மறையான எண்ணங்கள், மற்றவர்களை காயப்படுத்தாத பழக்கங்கள் இருந்தால் நாம் நிம்மதியான வாழ்க்கையை பெற முடியும். மன நிம்மதி, சந்தோஷம் இரண்டும் மனிதர்களுக்கு மிக அவசியமானது. இவை, இல்லாமல் ஒருவர் வாழ்ந்தால் அவர்களால் சுகமான வாழ்க்கையை வாழ முடியாது. மாற்றிக் கொள்ள வேண்டிய பழக்கங்கள் பற்றி தெரிந்து கொள்ளலாம்.
இதையும் படிங்க: பாகற்காயை கசப்பில்லாமல் சாப்பிட சூப்பர் ஐடியா.?! இப்பவே ட்ரை பண்ணுங்க.!
காலை வொர்க்கவுட்
உடல் ஆரோக்கியத்தில் எந்தவித கவனமும் இல்லாமல் இருப்பது. காலையில் எழுந்து நேரடியாக வேலைகளை செய்வது, இது அவர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தாது. மாறாக உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த சைக்கிள் ஓட்டுதல், ரன்னிங் மற்றும் நடை பயிற்சி அல்லது ஏதாவது உடற்பயிற்சியில் ஈடுபடலாம். இதனால், உடலும் மனமும் சுறுசுறுப்பாக இருக்கும். 30 நிமிடங்கள் அன்றாடம் இதற்கு நாம் ஒதுக்கும்போது நாம் மகிழ்ச்சியுடன் இருப்பதை உணரலாம்.
முறையில்லாத தூக்கமுறை
நமது மனநிலைக்கும், தூக்கத்திற்கும் அதிக தொடர்பு இருக்கின்றது. தூங்க வேண்டிய இரவு நேரங்களில் ஏதாவது வேலைகளை செய்து கொண்டு ஓய்வு இல்லாமல் சுற்றி திரிந்தால் ஒரு கட்டத்தில் உடல் சோர்வடையும். இதனால், மனதும் சோர்வடையும். ஒருவேளை சரியாக தூக்கம் வரவில்லை என்றால், மிதமான சூட்டில் உள்ள தண்ணீரில் குளித்துவிட்டு, வெதுவெதுப்பான தண்ணீரை குடித்தால் சீக்கிரம் உறக்கம் வரும். படுக்கையறை சுத்தமாகவும், அமைதியாகவும் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். இதன் மூலம் நிம்மதியான தூக்கத்தை பெறலாம். தூங்கி எழுந்தவுடன் உற்சாகத்தையும் உணரலாம்.
தனிமை பொல்லாதது
சமீப காலமாகவே பலரும் தனிமையாக இருக்க அதிகம் விரும்புகிறார்கள். இதற்கு முக்கிய காரணம் சமூக வலைதள ஆக்கிரமிப்பு தான். எப்போதும் செல்போன் அல்லது லேப்டாப் உள்ளிட்டவற்றை பார்த்துக்கொண்டு, ஏதாவது யோசித்துக் கொண்டு, தனிமையிலேயே இருப்பது. மற்றவர்களுடன் கலந்து பழகாமல் தனிமை ஏற்படுத்திக் கொண்டு அதில் அடிமைத்தனமாக செயல்படுவார்கள்.
இதனால் சமூகத் தொடர்பு பாதிக்கப்படுகிறது. இது நாளடைவில் உங்களை ஆழ்ந்த தனிமைக்கு கொண்டு செல்லும். எனவே, முடிந்தளவிற்கு குடும்பம், நண்பர்கள், அண்டை அயலார் ஆகியோருடன் சுமூகமாக பேசிக்கொண்டு தனிமையை போக்க முயற்சிக்க வேண்டும். இந்த 3 பழக்கங்களையும் நாம் மாற்றிக் கொண்டால் கவலையிலிருந்து மீண்டு சுகமான வாழ்க்கை வாழலாம்.
இதையும் படிங்க: புதினா சாதம் & சேனைக்கிழங்கு பொரியல்; சுவையாக செய்து அசத்துவது எப்படி?.. டிப்ஸ் உள்ளே.!