திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
குழந்தைகள் முன்னிலையில், சண்டை போடும் பெற்றோர்களா நீங்கள்.? அப்போ கண்டிப்பா படிங்க.!
கணவன் மனைவி உறவு என்பது எல்லா நாட்களிலும் சுமூகமாகவே செல்லாது. ஒரு சில நாட்களில் மனஸ்தாபமும், கருத்து வேறுபாடுகளும் வரலாம். அத்தகைய சூழ்நிலைகளில் இருவரும் சண்டையிடுவது வழக்கம். ஆனால் அந்த சண்டைகள் குழந்தைகள் முன் நிகழ்ந்தால், ஏற்படும் விளைவுகளையும் நாம் அறிந்து கொள்ள வேண்டும்.
பெற்றோர்களின் சண்டைகளை பார்க்கும் குழந்தைகளின் மனநிலை பெரிதளவும் பாதிக்கப்படுகிறது. உறங்கும் போதும் கூட குழந்தைகளால் பெற்றோர்கள் சண்டையிடுவதை உணர முடிகிறது என்கின்றனர் மருத்துவர்கள். இவற்றால் ஏற்படும் மனச்சிதைவு நாளடைவில் நீரிழிவு, இதயம் சம்பந்தப்பட்ட நோய்கள், ஆஸ்துமா, குறைவான நோய் எதிர்ப்பு சக்தி போன்றவற்றை உருவாக்குகின்றது.
பெற்றோர்கள் வாக்குவாதம் செய்வது கூட அவர்களின் மனநிலையை பாதிக்கும். குழந்தையின் மனதில் ஒரு பாதுகாப்பின்மை எப்போதும் இருந்து கொண்டே இருக்கும். இதனால் சில குழந்தைகள் தூக்கமின்மை தொந்தரவுகளுக்கு ஆளாகிறார்கள்.
குழந்தைகளுக்கு கவனக் குறைவு ஏற்படும். அவர்கள் தன்னம்பிக்கையை இழக்க நேரிடும். உறவுகளின் மேல் உள்ள நம்பிக்கை குறையும். நாளடைவில் குழந்தைகள், பெற்றோர்களை வெறுக்கும் நிலையும் ஏற்படலாம். அது குழந்தைகளுக்கு தற்கொலை எண்ணத்தை தூண்டும். பிற்காலத்தில் தன்னுடைய வாழ்க்கைத் துணையுடன் கூட இணக்கமாக வாழ முடியாது.
நாம் குழந்தைகள் முன் சண்டையிடுவதை தவிர்க்க வேண்டும். அவர்கள் முன் உபயோகப்படுத்தும் வார்த்தைகளையும், சிந்தித்து உதிர்க்க வேண்டும். அன்பு, ஒற்றுமை, நம்பிக்கை போன்றவற்றை அடித்தளமாகக் கொண்டு ஒரு குடும்பத்தை எழுப்பினால் அதில் வளரும் குழந்தைகள் மிகச்சிறந்த மனிதர்களாக வளருவார்கள் என்பதில் ஐயமில்லை.