திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
சூரிய ஒளி வராததால் கிராம மக்கள் சேர்ந்து செய்த செயல்.! ஆச்சரியத்தில் உலக நாடுகள்.!?
சூரிய ஒளியின் முக்கியத்துவம்
பொதுவாக சூரிய ஒளி என்பது மிகவும் அத்தியாவசியமான ஒன்றாக இருந்து வருகிறது. சூரிய ஒளி அதிகமாக இருந்தாலும் கடினம், குறைவாக இருந்தாலும் கடினம். ஆனால் ஒரு கிராமத்தில் சூரிய ஒளியே இல்லாமல் மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இத்தாலி நாட்டில் விக்னெல்லா என்ற கிராமத்தில் நவம்பர் மாதம் முதல் பிப்ரவரி மாதம் வரை சூரிய ஒளியே வராது.
இந்த மூன்று மாத சூரிய ஒளி இல்லாமல் அங்கு வாழும் மக்கள் மிகவும் துன்பத்திற்கு உள்ளாகி வந்தனர். இதனால் அந்த கிராம மக்கள் அனைவரும் அந்நாட்டு அரசுடன் சேர்ந்து வித்தியாசமான முயற்சியை மேற்கொண்டனர். அதாவது 2005ஆம் ஆண்டு அந்த கிராம மக்களும், அரசும் சேர்ந்து 1 கோடி நிதி திரட்டி கிராமத்தில் உள்ள பெரிய மலையில் மிகப்பெரும் கண்ணாடியை எதிர் திசை நோக்கி வைக்க முடிவு செய்தது.
இதையும் படிங்க: இத்தாலியில் இந்திய மாணவர் மர்ம மரணம்: குளியலறையில் சடலமாக மீட்பு.!
செயற்கை சூரியஒளி
இதன்படி 2006 ஆம் ஆண்டு 40 சதுர அடி பரப்பளவு கொண்ட அந்த கண்ணாடி வைக்கப்பட்டது. இதனால் அங்கு சிறிதளவு சூரிய ஒளி படும்போது இந்த கிராமத்திற்கு முழுவதுமாக சூரிய ஒளி கிடைத்துள்ளது. இந்த கிராம மக்களின் வித்தியாசமான முயற்சியை பார்த்து உலக நாடுகளும் வியந்து பாராட்டி வருகின்றனர். இந்த முயற்சி பல குளிர் பிரதேசங்களிலும் செய்யப்படும் என்றும் கூறுகின்றனர்.
இதையும் படிங்க: திருமணத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த இளம்பெண் ஆணவப்படுகொலை.! குடும்பமே சேர்ந்து நடத்திய பயங்கரம்.!!